வழுத்தினாள் தும்மினேன் ஆக....
வழுத்தினாள் தும்மினேன் னாக.... " வழுத்தினாள் தும்மினேன் னாக அழித்தழுதாள் யார்உள்ளித் தும்மினீர் என்று" குறள் 1317 வழுத்தினாள் _ வாழ்த்தினாள் தும்மினேன்னாக _ தும்மியதற்காக அழித்தழுதாள் _மாற்றி அழுதாள் யார் _ யாரை உள்ளி _ நினைத்து தும்மினீர் _ தும்மல் கொண்டீர் என்று _ என்றாள் நான் தும்மியதற்காக என்னை வாழ்த்தியவள் உடனே அதனை மாற்றிவிட்டு யாரை நினைத்துத் தும்மினீர் என்று கூறி அழுதாள். விளக்கம் : தும்மலின்போது உயிர் ஒரு வினாடி போய்விட்டு வரும் என்பது பழைய நம்பிக்கை.அதனால் உடன் இருப்பவர் நீடூழி வாழ்க என்று வாழ்த்துவார். இது காலங்காலமாக இருந்துவரும் ஒரு மரபு. மிகவும் நேசிக்கிற ஒருவர் நினைக்கும்போதுதான் தும்மல் வருமாம். தலைவனைத் தலைவி உயிருக்கு மேலாக நேசிக்கிறாள். தன்னைவிட வேறு எந்தப் பெண்ணையும் தலைவன் ஏறெடுத்துக் கூட பார்க்கக் கூடாது என்று நினைக்கிறாள். அப்போது தற்செயலாக தலைவனுக்குத் தும்மல் வந்துவிடுகிறது. தும்மிவிடுகிறான். உடனே நீடூழி வாழ்க என்று வாழ்த்தி விடு...