Posts

Showing posts with the label ஹாலோவீன் திருவிழா என்றால் என்ன கட்டுரை

ஹாலோவீன் திருவிழா என்றால் என்ன

ஹாலோவீன் திருவிழா என்றால் என்ன  பேய் இருக்கிறதா இல்லையா  விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது. பேய் இல்லை என்போர் ஒருபுறம் இருக்கிறது என்போர் மறுபுறம்  நின்று விவாதங்களும் பட்டிமன்றங்களும் நடத்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இன்றுவரை முடிவான எந்தக் கருத்தும் எட்டப்படவில்லை. ஆனால் பேய் படங்கள் உலகை பேய்கள் உண்டு என்று நம்ப வைத்துக் கொண்டிருக்கின்றன.அதனால்தான் பேய் படங்கள் சக்கைப்போடு போடுகின்றன. பேய் பற்றிய நம்பிக்கை எல்லா நாடுகளிலும் இருக்கிறது. இறந்துபோனவர்களின் ஆன்மாக்கள், திருப்தியடையாமல் இருந்தால்  அவை திரும்பி வந்து மனிதர்களைத் தாக்கும் என்ற நம்பிக்கை எல்லா நாட்டு மனிதர்களிடையேயும் இருந்துவருகிறது.  இனம், மொழி, நாடு, படித்தவர், படிக்காதவர் என எந்தவித பாகுபாடுமின்றி  பேய்களைப் பற்றிய பயம் மனிதர்களை ஆட்டிப் படைத்துக் கொண்டுதான் இருக்கிறது . அந்த பயம் திருவிழா கொண்டாடும் அளவுக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது .   பேய்களுக்கு என்று ஒரு விழாவை அமெரிக்கர்கள் கொண்டாடுகிறார்கள். அதுதான் ஹாலோவீன் திருவிழா. ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 31-ம் நாளை, ஹாலோவீன் தினமா...