சின்னஞ்சிறு கிளியே
சின்னஞ்சிறு கிளியே... பாரதியின் கண்ணன் பாட்டு தெரியும். கண்ணம்மா பாட்டு தெரியுமா? பாரதி கண்ணனை குழந்தையாக உருவகித்துப் பாடிய பாடலான சின்னஞ்சிறுக் கிளியே என்ற பாடலைத்தான் நான் கண்ணம்மா பாட்டு என்கிறேன். இந்தப் பாடலில் பாரதி ஒரு குழந்தையாக எப்படி எப்படி எல்லாம் கொஞ்சி மகிழ்கிறார் என்பதைப் பாருங்கள். கண்ணம்மா பாரதியின் மனதை என்ன பாடுரபடுத்தியிருக்கிறாள் என்பதைச் சொல்லிச் சொல்லிப் பரவசப்பட்டிருக்கிறார். கண்ணம்மா பாரதியின் துன்பம் எல்லாம் நீக்க வந்திருக்கிறாள். திக்குமுக்காட வைத்திருக்கிறாள். சஞ்சலப்படுத்தியிருக்கிறாள். ஓடி விளையாட வைத்திருக்கிறாள் உச்சி குளிர வைத்திருக்கிறாள். உள்ளம் கர்வம் கொள்ள வைத்திருக்கிறாள். கள்வெறி கொள்ள வைத்திருக்கிறாள். இமைக்குள் இருந்து இன்பம் தந்திருக்கிறாள் உயிராய் உணர்வாய் உறவாய் இருந்து ஆனந்தப்பட வைத்திருக்கிறாள். அதனைப் பாரதி தனது சின்னஞ்சிறு கிளியே என்ற பாடலில் சொல்லிப் சொல்லிக் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார். பாரதியின் கண்ணம்மாவை நாமும் கொண்டாட வேண்டாமா? வாருங்கள் நாமும் பாரதியோடு சேர்ந்து கண்ணம்மாவைக் கொண்டாடுவ...