Posts

Showing posts with the label நாகாக்க-கட்டுரை

நாகாக்க

நாகாக்க  காக்க ....காக்க...நாவைக் காக்க.. அதென்ன நாவைக் காக்க...  நாவைக் காக்க முப்பத்து இரண்டு  காவலாளிகள் இருக்கின்றனரே... போதாதா?  இன்னும் வேறு எத்தனை காவலாளிகள்   போட்டு காக்க வேண்டும்? " யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்  சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு"   என்கிறார் வள்ளுவர். எதைக் காக்காவிட்டாலும் நாவைக்  மட்டுமாவது காத்துக்கொள்ள வேண்டும். அப்படி காத்துக் கொள்ளாதிருந்தால் தவறான சொற்களைப் பயன்படுத்திவிட்டு துன்பப்பட நேரிடும்.  வள்ளுவரின் வாய்மொழியை மதியாமல்    வாங்கிக் கட்டிக் கொண்ட  கதைகள் பல உண்டு. ஓர் ஊரில்  ஒரு  கழுதையும்  ஒரு நரியும் நண்பர்களாக இருந்து வந்தன.  கழுதை பகல் முழுவதும் பொதி சுமக்கும்.  இரவு வந்ததும் தன் நண்பன் நரியோடு   சேர்ந்து வெள்ளரித் தோட்டத்தில் புகுந்து   வெள்ளரிக்காய்களைத் திருடித் தின்னும்.    ஒருநாள் இரவு திருட செல்லும்போது கழுதை தன்னைப் பற்றி நரியிடம்  பெருமையாகப் பேசிக் கொண்டே வந்தது. " நான் நன்றாக பாடுவேன்...கேளேன்..." எ...