நிறைநீர நீரவர் கேண்மை....
நிறைநீர நீரவர் கேண்மை...... "நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்நீர பேதையார் நட்பு குறள் : 782 நீரவர் _ அறிவுடையவர் கேண்மை _ நட்பு பிறை - வளர்பிறை நிறைநீர _ நாளும் வளருவது போல பேதையார் _ அறிவில்லாதவர் நட்பு _ நட்பானது மதி _ நிலவு பின்நீர _ பின் நாளில் தேய்ந்து போவது போல அறிவுடையவர்களோடு கொள்ளும் நட்பு வளர்பிறை போல நாளும் வளர்ந்து கொண்டே இருக்கும். அறிவில்லாதவரோடு கொள்ளும் நட்பு தேய்பிறை போல நாளும் தேய்ந்து ஒருநாள் காணாமல் போய்விடும். விளக்கம் : வளர்பிறையானது ஆரம்பத்தில் சிறிதாகவே இருக்கும். நாளாக ஆக வளர்ந்து கொண்டே இருக்கும். அதுபோல அறிவுடையவர்களோடு கொள்ளும் நட்பும் ஆரம்பத்தில் சிறிதாக இருந்தாலும் ...