அறம் செய்ய விரும்பு
அறம் செய்ய விரும்பு அறம் செய்ய விரும்பு என்று நான் தொடங்கி விட்டுவிட்டால் போதும். அறம் செய்ய விரும்பு. ஆறுவது சினம். இயல்வது கரவேல் ஈவது விலக்கேல் என்று கடகடவென்று ஒப்பித்து விடுவோம். அந்த அளவுக்கு ஆத்திசூடிக்கும் நமக்கும் ஒரு நெருக்கம் உண்டு. ஆத்திசூடியை நெஞ்சிலே குடி வைத்திருப்போம். நேரம் வரும்போதெல்லாம் சொல்லி மகிழ்வோம். முதன்முதலாக நாம் உரக்கப் படித்த வரிகள். உள்ளத்திலேயே குடி வைத்திருக்கும் வரிகள். அதன் பொருள் என்ன என்பதைப் பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை. எனக்கு ஆத்திசூடி தெரியும் அவ்வளவுதான். இப்போது பொருளுக்கு வருவோம். அறம் செய்ய விரும்பு விருப்பம் ஆளுக்கு ஆள் வேறுபடும். சிலர் ஆடம்பரமாக பொருட்களை வாங்கிக் குவிக்க விரும்பலாம். இன்னும் சிலர் பணம் சம்பாதிக்க விரும்பலாம். மேலும் சிலர் பேரும் புகழும் பெற விரும்பலாம். சிலர் படித்து நிறைய பட்டம் வாங்க விரும்பலாம். சிலர் உழைப்பை விரும்பலாம். ஏன் இன்னும் சிலர் தூக்கத்தை விரும்பலாம் . இப்படி விருப்பம் அவரவர் மனநிலைக்கு ஏற...