உலக மகளிர் தினம்
உலக மகளிர் தினம் மார்ச் எட்டாம் நாள் உலக மகளிர் தினம். வாழ்த்துகள் பரிமாறப்படும். கொண்டாட்டங்கள் ,போட்டிகள் பட்டிமன்றங்கள் என்று ஊடகங்கள் எங்கும் பெண்கள் நிகழ்ச்சிகள் களைகட்டும். நாளிதழ்கள், வார இதழ்கள்,மாத இதழ்கள் அனைத்தும் சாதனைப் பெண்களின் கட்டுரைகளால் நிறைக்கப்பட்டிருக்கும். தன்னார்வ அமைப்புகளும் அரசும் சாதனைப் பெண்களைக் கண்டறிந்து விருதுகள் கொடுத்து மரியாதை செய்யும். இவற்றை எல்லாம் பார்க்கும் நாம் அடேங்கப்பா...பெண்களுக்கு இவ்வளவு அங்கீகாரமா என்று அண்ணாந்து பார்த்து மலைத்து நிற்போம். நாமும் இப்படி ஒரு சாதனை புரிந்தால் உலகம் நம்மைக் கொண்டாடும் என்று கனவு காண வைக்கும். நாளைய சாதனையாளர் நான்தான் என்று கனவில் மிதக்க வைக்கும். ஒருவகையில் இந்தக் கொண்டாட்டம் நம்மை ஊக்குவிப்பதாகவே இருக்கும். இருக்க வேண்டும். அப்படி ஊக்குவிப்பதாக இருந்தால்தான் இந்தக் கொண்டாட்டத்திற்கான பலனைப் பெற்றதாகக் கொள்ள முடியும். ஆனால் உண்மையில் உலக மகளிர் நாள் எதற்காகத் தொடங்கப்பட்டது? உலகெங்கிலும் உள்ள சாதனையாளர்களைக் கண்டறிந்து உலகிற்கு அறிமுகப்படுத்துவதற்காகவா மகளிர் ...