காணும் பொங்கல்
காணும் பொங்கல் தை மாதம் மூன்றாம் நாள் காணும் பொங்கல். இந்த நாளில் தங்கள் உற்றார் உறவினரைச் சந்தித்து தங்கள் அன்பையும் தாங்கள் செய்த பண்டங்களையும் தங்கள் பரிமாறிக்கொள்ளும் நாளாக இருக்கும். இது கணுப் பொங்கல் அல்லது கன்னிப் பொங்கல் என்றும் அழைக்கப்படுவதுண்டு. இந்த நாளில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும். உறியடித்தல்,கயிறு இழுத்தல், கபடிப்போட்டி,வழுக்கு மரம் ஏறுதல் என்று பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் இந்த நாளில் நடைபெறும். வீரவிளையாட்டுக்கான நாள் என்றுதான் சொல்ல வேண்டும். காணும் பொங்கலின் சிறப்பே அன்று கொண்டு சென்று உண்ணும் உணவுதாங்க.... அப்பப்பா...என்ன ருசி... என்ன ருசி.... நல்லா சாப்பிட்டீங்களோ என்கிறீர்களா? இல்லைங்க....அப்பப்போ மற்றவர்களோடு சிறுபிள்ளையாக இருந்தபோது தின்றிருக்கிறேன். அதுவும் காணாமல்தான். எங்கள் வீட்டில் அந்த நல்ல பழக்கம் எல்லாம் இல்லை. முன்பு பொங்கல் இந்துக்கள் மட்டும் கொண்டாடும் பண்டிகையாக இருந்தது. இப்போது அது தமிழர் திருநாளாக மாறிப் போனதில் எம் போன்றோருக்குப் பெருமையும் மகிழ்ச்சியும் கூடியிருக்கிறது என்றுதான் சொல்ல...