மூளையைச் சுறுசுறுப்பாக வைப்போம்
மூளையைச் சுறுசுறுப்பாக வைப்போம் " இரும்பை பயன்படுத்தாவிட்டால் துருப்பிடித்துப் போகும். தேங்கிய நீர் தூய்மை இழந்துவிடும். அதேபோல் செயல்படாமை மனதின் சக்தியை உறிஞ்சிவிடுகிறது." என்பார் லியர்னடோ டாவின்சி . நம் எல்லோரிடமும் கண்டிப்பாக ஒரு திறமை இருக்கும். எந்த ஒரு திறமையும் இல்லாதவர் என்று எவருமே கிடையாது. எந்த வேலையும் செய்யாமல் சோம்பி இருப்பவனை மூளை இல்லாதவன் என்று முத்திரை குத்தி ஒதுக்கி வைத்துவிடுவோம். நன்றாக படிக்கிற ஒரு மாணவனைப் பார்த்து அவனுக்குச் செம மூளைப்பா...என்று சொல்லி பெருமைப்படுத்துவோம். அப்படியானால் கடவுள் படைப்பில் பாரபட்சமா? ஒருவருக்கு அதிக மூளையும் இன்னொருவருக்கு குறைந்த அளவு மூளையும் வைத்து கடவுள் படைத்துவிட்டாரோ என்ற ஐயம் எழுகிறதல்லவா! வேடிக்கையான ஒரு கதை ஒன்று உண்டு. கடவுள் மனிதனை உருவாக்கி அழகு பார்த்தாராம். கை, கால் ,மூக்கு ,கண் என்று ஒவ்வொன்றாக சரியாக அதனதன் இடத்தில் வைத்து முழுமையான மனிதனை உருவாக்கினாராம். நல்லபடியாக உருவாக்கியாயிற்று இனி வாழ்ந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் பூமிக்கு அன...