Posts

Showing posts with the label எழுதுங்கால் கோல்காணாக்....

எழுதுங்கால் கோல்காணாக்....

Image
  எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல்.... " எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன் பழிகாணேன் கண்ட விடத்து"                              குறள் எண்  : 1285 எழுதுங்கால்  _ கண்ணிற்கு மை எழுதுங்கால் கோல் _ மை தீட்டும் கோல் காணா _ ,காணப்படாது கண்ணேபோல் _ கண்களைப் போன்று கொண்கன் _ கணவன் பழி _ குற்றம் , தவறு காணேன் _ காண மாட்டேன் கண்டவிடத்து _ பார்த்தபோது , காணும்போது கண்களுக்கு மை தீட்டும்போது மை தீட்டப் பயன்படுத்தும் கோல் கண்களுக்குத் தெரிவதில்லை.  அதுபோல கணவனைக் கண்டதும் அவன் செய்த  குற்றம் கண்களுக்குத் தெரிவதில்லை.   விளக்கம் : பெண்கள் கண்களுக்கு மை தீட்டும்போது அருகில்   கொண்டு செல்லும்வரை அந்தக் கோல்   கண்களுக்குத் தெரியும். மிக அருகில்   கொண்டு சென்றதும் கோலைக் கண்களால்   காண முடியாது. அதுபோன்றுதான் கணவன் செய்யும் குற்றங்கள்  கணவன் அருகில் இல்லாதபோது பெரிதாகத்  தெரியும். இன்று வரட்டும்... வரட்டும் ... இரண்டில் ஒன்று பார்த்து...