சினத்தைப் பொருளென்று கொண்டவன்....
சினத்தைப் பொருளென்று கொண்டவன்.... " சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு நிலத்தறைந்தான் கைப்பிழையா தற்று" குறள் :. 307 சினத்தை -கோபத்தை,வெகுளியை பொருள் - செல்வம் என்று- என்பதாக கொண்டவன் - எண்ணிக் கொண்டவன் கேடு - கெடுதல் நிலத்து- நிலத்தின் மீது அறைந்தான் - அடித்தவன் கை - கையானது பிழையாது - தப்பாது அற்று- அது போன்றது நிலத்தை அறைந்தவன் கையானது வலியிலிருந்து எப்படித் தப்ப முடியாதோ அதுபோல கோபம் கொள்பவனும் தான் கெடுவதிலிருந்து ஒருபோதும் தப்ப முடியாது. விளக்கம் : என்னிடம் வலிமை இருக்கிறது. செல்வம் இருக்கிறது. கூடவே கோபமும் இருக்கிறது. இப்படிப்பட்ட பெருமை சிலருக்கு உண்டு. கோபம் வந்தால் சட்டென்று அறைந்துவிடுவேன் என்று சொல்லும் ஆட்களும் உண்டு. இன்னும் சிலர் கோபம் வந்தால் கண்மண் தெரியாமல் பேசிவிடுவிடுவேன் என்பர். இந்தக் கோபத்தை ஒரு பொருளாக தன்னுடனேயே வைத்திருப்பதில் என்ன பெருமை இருக்கிறது? அப்படி கோபத்தை உங்களோடு வைத...