Posts

Showing posts with the label கம்பர் வீட்டுக் கட்டுத் கறியும் கவிபாடும் - பழமொழி விளக்கம்

கம்பர் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும்

கம்பர் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்  " கம்பர் வீட்டுக் கட்டுத் தறியும்  கவி பாடும்" என்று சொல்வார்கள். அது என்ன  கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் ? காரணம் இல்லாமல் எந்தவொரு  பழமொழியும் சொல்லப்படுவதில்லை. அதற்கென்று ஒரு வரலாறோ  ஓர்  உண்மையான பின்புலமோ இருக்க வேண்டும். அது என்ன வென்று அறிய வேண்டும் என்ற வேட்கை என்னுள் எழ  அதற்கான  தேடலில் ஈடுபட்டேன். தேடலில் வலையில் அகப்பட்டார் ஒரு பெண். யாரிவள் ...யாரிவள் என்று அறிந்து கொள்ள அவன் பின்னணியை அலசி ஆராய அவள் பின்னாலையே மனம் ஓட  அவளோ அருகிலுள்ள  ஒரு வீட்டினுள் சென்று மறைந்து போனாள். எப்படி இவளைப் பிடிப்பது? தெரியாத வீட்டினுள் சென்று எட்டிப் பார்ப்பது நாகரிகம் அல்லவே என்று கையைப் பிசைந்தபடி தெருமுனையில் நின்றிருந்தேன். மறுபடியும் அதே பெண் காட்சிக்கு வந்தாள். இப்போது நான் அவளை விடுவதாக இல்லை.  அப்போது இன்னொரு புலவர் அங்கு வர காட்சி மாறியது.கதை சூடுபிடிக்க தொடங்கியது. அவளிடம் அங்கு வந்தப் புலவர் ஏதோ கேட்டார். காதுகளைக் கூர்மையாக்கி அவர்களுக்குள் நடந்த உரையாடலை  உற்றுக் கேட...