Posts

Showing posts with the label தந்தை தாய்ப் பேண்_ ஆத்திசூடி விளக்கம்

தந்தை தாய்ப் பேண்

Image
தந்தை தாய்ப் பேண் " தந்தை தாய்ப் பேண் " அனைவருக்கும் பிடித்தமான  ஆத்தி சூடி பாடல் வரி இது. அடிக்கடி பலர் உதடுகள் உச்சரிக்கும் வரி. பெற்றோரை நினைவுபடுத்திக் கொண்டே  இருக்கும் வரி. பெற்றோரைப் பேணி பாதுகாத்துக் கொள்  என்று வேறு யாராவது நினைவுபடுத்த  வேண்டுமா என்ன? "மறந்தால்தானே  நினைப்பதற்கு.. உன்னை நெஞ்சிலேயே  வைத்திருக்கிறேன் "என்று எத்தனைமுறை வீர வசனம் பேசியிருப்போம். ஆமாங்க...மறந்தால்தானே நினைவூட்டல் வேண்டும். நாம்தான் பெற்றோரை மறக்கவில்லையே... பிறகு எதற்கு இந்த நினைவூட்டல்  என்கிறீர்களா....? மறந்தவர்களுக்கு நினைவூட்டல் தேவை  அல்லவா!. அதனால் தான் " தந்தை தாய்ப் பேண் " என்று நினைவூட்டிக் கொண்டே இருக்கிறார் ஔவை. பெரும்பாலான வீடுகளில் வயது முதிர்ந்ததும்  பெற்றோர்  பிள்ளைகளுக்குச் சுமையாகிப் போகின்றனர். அந்நியமாகிப் போகின்றனர். ஏதோ வேண்டாத விருந்தாளி வந்து உட்கார்ந்திருப்பதுபோல் வெறுப்போடு நடத்துகின்றனர். பார்த்தும் பார்க்காதது போல் முகத்தைத் திருப்பி வைத்துக் கொள்கின்றனர். மகன்கள் எப்படி இருக்கீங்க?என்ற ஒற்றை வரி  நலம் விச...