Posts

Showing posts with the label அன்பிலாள் இட்ட அமுது- ஔவை

அன்பிலாள் இட்ட அமுது

அன்பிலாள் இட்ட அமுது பந்தியில் சாப்பிட அமர்ந்ததும்  எப்போது சாப்பாடு பரிமாறுவார்கள். சாப்பிடலாம் என்று தோணும். அதற்குக் காரணம் கண்முன்னே வந்து போகும் சாப்பாடும் அதன் மணமும் மட்டுமல்ல. அங்கே உணவு பரிமாறும் முறையும் விழுந்து விழுந்து கவனிக்கும் சில கனிவான மனிதர்களுமாகத்தான் இருக்கும். மாறாக பத்தியில் அமர்ந்திருப்போம். ஆனால் சாப்பாடு பரிமாறுகிறவரின் பார்வையும் நடந்துகொள்ளும் விதமும் நம்மை ஏன்தான் இங்கு சாப்பிட வந்தோமோ என்று கேள்வி எழுப்ப வைக்கும் .சாப்பிட விடாமல் தடுத்து நிற்கும். அதனால்தான் ஔவை, "உண்ணீர் உண்ணீர் என்று  ஊட்டாதார் தம்மனையில்  உண்ணாமை கோடியுறும்" என்று சொல்லித் தந்தார். கொடிது கொடிது பசி மிகமிகக் கொடிது என்பது உண்மை.  'பசி வந்திடப் பத்தும் பறந்துபோம்' என்பார்கள்.  பசி ருசி அறியாது.பசியில் யார் எவர் உணவு தருகிறார் என்று ஆராய்ந்து பார்க்க முடியாது. எந்த இடத்தில் இருந்து சாப்பிடுகிறோம் என்று எண்ணத் தோன்றாது. பசி,  தரம் தராதரம் என்று எதையும்  பார்க்காது. இதுதான் பசியின் குணம். இப்படித்தான் ஒருமுறை ஔவையாரையும் பசி வாட்டி வதைத்தது.   ஆனால் ய...