Posts

Showing posts with the label உலகத்தோடு ஒட்ட ஒழுகல்...

உலகத்தோடு ஒட்ட ஒழுகல்...

Image
    உலகத்தோடு ஒட்ட ஒழுகல்..... " உலகத்தோடு ஒட்ட ஒழுகல்  பலகற்றும் கல்லார் அறிவிலா தார் "                        திருக்குறள்  :  140 உலகத்தோடு _,உலக மக்களோடு,உயர்ந்தோரோடு ஒட்ட _ பொருந்த , இணக்கமாக ஒழுகல்  _ நடந்து கொள்ளுதல் பலகற்றும் _ பல நூல்களைக் கற்றிருந்தாலும் கல்லார்  _ அறியாதவர் ,கற்காதவர் அறிவிலாதவர்  _ அறிவில்லாதவரே ஆவார் உயர் ஒழுக்கம் கொண்ட நல்லோரோடு இணக்கமாக இருக்கும் நற்பண்பைக் கற்றுக் கொள்ளாதவர் பல நூல்களைக் கற்றவராக இருப்பினும் அறிவில்லாதவராகவே கருதப்படுவார். விளக்கம்  : உயர்ந்த ஒழுக்க நெறிகளைக் கொண்டோரோடு இணக்கமாக இருக்கும் பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதுதான் நாம் கற்ற கல்வியின் பயனாக இருக்கும். அப்படி இல்லாது எனக்கு எல்லாம் தெரியும்.என்போக்கில் நான் போவேன் என்று தான்தோன்றித் தனமாக செயல்படுபவர் எத்தனை நூல்களைக் கற்றவராக இருப்பினும் கல்லாதவர் என்றே கருதப்படுவார். வாழ்தல்...