ஆபத்துக் குதவாப் பிள்ளை....
ஆபத்துக் குதவாப் பிள்ளை.... அனுபவ மொழிகள் அடங்கிய அறிவுக் கருவூலம் விவேக சிந்தாமணி என்ற நூல். இது செய்யுள் வடிவில் இயற்றப்பட்டிருந்தாலும் எளிய நடையில் எழுதப்பட்டிருப்பதால் அனைவராலும் எளிதில் பொருள் அறிந்து கொள்ள முடியும். இதன் ஆசிரியர் யார் என்பதற்கான எந்தவித ஆதாரமும் கிடைக்கவில்லை. சிந்தனைக்கு உகந்த கருத்துக் குவியல் என்பது மட்டுமல்லாமல் நீதிக் கருத்துகளும் கொண்ட ஒரு அரிதான செய்யுள் தொகுப்பு நூல் இது என்பது மட்டும் உண்மை. இந்தப் பகுத்தறிவு பட்டறைக்குள் மொத்தம் 135 பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலும் படிக்கப் படிக்க சிந்திக்கத் தூண்டும். தத்துவத்தை அள்ளித் தரும். கற்பனைகள் மனதைக் கொள்ளை கொள்ளும். உவமை உள்ளத்திற்குள் கிளர்ச்சியை ஏற்படுத்தும். நீதிக் கருத்துக்கள் விஞ்சி நிற்கும். அந்தப் பாடல்களிலிருந்து ஒரே ஒரு பாடல் உங்களுக்காக... பயனில்லாதவை எவை எவையென தனித்துவப்படுத்தி அடையாளம் காட்டிச் சொல்லிச் செல்லும் பாடல் இதோ: " ஆபத்துக் குதவாப் பிள்ளை அரும்பசிக் குதவா அன்னம் தாபத்தைத் தீராத் தண்ணீர் தரித்திரம் அறியாப் பெண்டிர் கோபத்தை அடக்கா வேந்தன்...