Posts

Showing posts with the label பாரதியார் பாடல்

தேடிச் சோறு நிதந் தின்று

Image
தேடிச் சோறு நிதந் தின்று.... வயிற்றுக்காகத்தானே இந்தப்பாடு என்று சொல்வதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். எண்சாண் உடம்பில் ஒரு சாண் வயிறே பிரதானம் என்று சொல்லிச் சொல்லி பெருமைப்பட்டிருக்கிறோம். அதெல்லாம் ஒரு வாழ்க்கையா? வாழ்க்கை என்றால் எப்படி  இருக்க வேண்டும்?  பிறந்தோம்...இருந்தோம்... வாழ்ந்தோம் என்று இருக்கக்கூடாது. எந்தக் கவலையும் இல்லா வாழ்க்கை  வாழணும் . கவலை இல்லா வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆசைதான். ஆனால் இவை எல்லாம் நடக்குமா? நல்வினையோ தீவினையோ எல்லாம் இறைவன் செயல். நல்வினை எல்லாம் இறைவன் செயல். தீவினையுமா...? தீவினையும் அவன் செயல் என்றால் சற்று நெருடலாக இருக்கிறதே என்று கேட்கத் தோன்றும். அப்படியானால் இதிலிருந்து தப்பிக்க என்னதான் வழி? ஒன்றும் செய்யமுடியாது. அதுவும் இறைவன் கையில்தான் இருக்கிறது. இறைவனிடம் முரட்டுக் பக்தன் பிடிவாதம் பிடிப்பதுபோல பிடிவாதமாகக் கேட்டால் கண்டிப்பாக இறைவன் கேட்ட வரம் அருளுவார் .நன்மை வேண்டும் என்று விடாப்பிடியாக கேட்டால் நன்மை கிடைக்கும். இது இறை நம்பிக்கை உள்ள அனைவரும் ஒத்துக்கொள்ளும்  உண்மை. நடந்ததா... ? நடக்கவில்லையா ...?...

மனதில் உறுதி வேண்டும்

மனிதில் உறுதி வேண்டும் மனதில் உறுதி இருப்பவர்கள் எதையும் சாதிக்கும் துடிப்பு  மிக்கவர்களாக இருப்பர். தளர்ச்சி என்பது அவர்கள் அகராதியில் இருக்காது. வேகமும் துடிப்பும் அவர்கள் செயலில் இருக்கும்.  வெற்றி பெற வேண்டும் என்ற தணியாத் தாகம் அவர்கள் தேடலில் இருக்கும். மனதில் உறுதி இருந்தால் எந்தச் சோர்வும் கிட்ட அண்டாது. இதை மனதில் வைத்துதான் பாரதி மனதில் உறுதி வேண்டும் என்ற பாடல் பாடியிருக்க வேண்டும். இதோ பாரதியின் அந்தப் பாடல். மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும் நினைவு நல்லது வேண்டும் நெருங்கினப் பொருள் கைப்பட வேண்டும் கனவு மெய்ப்பட வேண்டும் கைவசமாவது விரைவில் வேண்டும் தனமும் இன்பமும் வேண்டும் தரணியிலே பெருமை வேண்டும் கண் திறந்திட வேண்டும் காரியத்தில் உறுதி வேண்டும் பெண் விடுதலை வேண்டும் பெரிய கடவுள் காக்க வேண்டும் மண் பயனுற வேண்டும் வானகம் இங்கு தென்பட வேண்டும் உண்மை நின்றிட வேண்டும் அருமையான பாடலில்லையா? மனதில் உறுதி வேண்டும். உறுதி மட்டும் இருந்தால் போதுமா?  பேச்சில் இனிமை வேண்டாமா? பேச்சு ஒன்று நினைவு ஒன்று என்று மாறுபாடாக இருக்கலாமா? கூடாதல்லவா! நினைவும் நல்லதா...

செந்தமிழ் நாடெனும் போதினிலே...

  செந்தமிழ் நாடெனும் போதினிலே.... செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே- ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே தந்தானே தந்தானே  தந்தானே  தந்தானே  தந்தானே தந்தானே தந்தானா தந்தானே தந்தானே  தந்தானே  தந்தானே தந்தானே தந்தானே தந்தானா                                      -   செந்தமிழ் வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர் வீரம் செறிந்த தமிழ்நாடு - நல்ல காதல் புரியும் அரம்பையர்போல்  இளங் கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு தந்தானே தந்தானே தந்தானே தந்தானே தந்தானே தந்தானை தந்தானா தந்தானே தந்தானே தந்தானே தந்தானே தந்தானே தந்தானே தந்தானா                               -       செந்தமிழ் காவிரி தென்பெண்ணை பாலாறு -தமிழ் கண்டதோர் வையை பொருனை நதி - என மேவிய யாறு பலவோடத் -திரு மேனி செழித்த தமிழ்நாடு தந்தானே தந்தானே  தந்தானே  தந்...