Posts

Showing posts with the label உழைப்பாளி- செல்வாவின் சிறுகதைகள்

உழைப்பாளி

" உழைப்பாளி "சுயம்பு...சுயம்பு" சுயம்புவ எங்கங்க? எல்லாரும் சாப்பிட்டுட்டு எழும்பிட்டாவ. இன்னும் சுயம்புவ காணோம்" கண்கள் தோட்டத்திற்குள் வெகுதூரம் வரை தேடியபடி கணவனிடம் கேட்டாள் பாக்கியத்தம்மா. "வருவான்... வருவான். நீ சாப்பிட்டியா? முதல்ல நீ சாப்பிடு " "சாப்பிடுவேன். சுயம்பு வந்துட்டான்னா அவனுக்கும் சோறு போட்டு கொடுத்துட்டு கையோடு சாட்பிட்டுருவேன்.மணி ரெண்டு ஆகப்போகுது இன்னும் சாப்பிட வராம அவன் அங்கே என்ன செய்றான்?" "வரப்ப வெட்டிட்டு நின்னான். மண்வெட்டிய கீழ்ப் போட்டுட்டு வான்னேன். வாரேன்னான்... அவன் என்னைக்கி ஆளோட இருந்து சாப்பிட்டுருக்கான்?" "தேரம் ஆவுது...ஒரு எட்டு போய் பார்த்து கூப்பிட்டுட்டு வாரேன்" "இந்த வெயிலுல நீ எங்க போறா? அந்த தென்ன மரத்துக்கு கீழ் செல்லபாண்டி பய படுத்து கிடக்கான். அவனப்போயி கூட்டிட்டிட்டு வர சொல்றேன். நீ  இலையில சோற போட்டு வை" "வேண்டாம். முதல்லேயே  சோறு போட்டு வச்சா.சோத்துல தூசுகீசு விழுந்துடும் ....அவன் வரட்டும். போட்டு கொடுக்குறேன்" "ஏல...செல்லப்பாண்டி அந்த சுயம்புவ ஒரு எட...