அறிவினான் ஆகுவ துண்டோ....
"அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தந்நோய்போல் போற்றாக் கடை " குறள் : 315 அறிவினான் - அறிவினால் ஆகுவது - ஆகும் செயல் உண்டோ - உளதோ பிறிதின் - மற்றவருடைய நோய் - துன்பம் தம் - தமது நோய் - துயரம் ,இன்னல் போல் - போன்று போற்றாக்கடை - கருதப்படாவிடத்து பிறர் உயிர்கள் படும் துன்பத்தைத் தன் துன்பம் போன்று கருதும் பண்பு இல்லாவிட்டால் பெற்ற அறிவினால் ஏதேனும் பயன் உண்டோ? விளக்கம் : அறிவு என்பது யாது என்பதற்கு அருமையான விளக்கம் தரப்பட்ட குறள். ஏராளமாக புத்தகங்கள் படிப்பவரை அறிவாளி என்போம். நிறைய பட்டங்கள் வாங்கி வைத்திருப்பவரை என்னே அறிவு ! அதனால்தான் இத்தனை பட்டங்கள் வாங்கி வைத்திருக்கிறார் என்று வியந்து போவோம். ஆனால் இது எல்லாம் அறிவு இல்லைங்க. அறிவுக்கு இலக்கணம் நான் வகுத்திருக்கிறேன் கேளுங்கள் என்கிறார் வள்ளுவர். ஒருவன் படுகிற துன்பத்தைப் பார்த்து சும்மா இருக்காமல் உடனே ஓடிச்சென்று உதவும் பண்பு இருக்க வேண்டும். பிறருக்கு வந்த துன்பத்தைத் தனக்கு வந்த துயரென கருதி அத...