புத்தாண்டு வரவேற்பு
புத்தாண்டு வரவேற்பு புத்தாண்டு வரவேற்புக்காக அனைவரும் வாசலில் காத்துக் கொண்டிருக்கிறோம். மனம் நிறைய மகிழ்ச்சியைப் சுமந்துகொண்டு முன்வரிசையில் நிற்கின்றனர் சிலர். ஏதோ ஒரு தயக்கம் வரவேற்பில் முன் வரிசையில் நிற்கவிடாதபடி தடுத்து நிற்க பின்னால் நின்று பதுங்கிப் பதுங்கி எட்டிப்பார்த்துக் கொண்டு நிற்கின்றனர் இன்னும் சிலர். வரும் ஆண்டு எப்படிப்பட்டதாக இருக்கும்? நன்மைகளை அள்ளி வரப்போகிறதா அல்லது துள்ளி வரும் கொரோனாவைக் கூடவே கூட்டி வந்து கும்மியடித்துக் கும்மாளமிடப்போகிறதா? இப்படி ஒரு அச்சத்தில் இன்னும் சிலர். புத்தாண்டு வந்தால் என்ன? வராமல் போனால் என்ன?என்று ஒரு சலனமும் இல்லாமல் எல்லா நாளையும் போல்தான் இதுவும் ஒரு நாள். மற்றபடி எதிர்பார்ப்பதற்கு இதில் என்ன இருக்கிறது? என்ற கேள்வியை முன் வைத்து ஒரு மகானைப் போன்ற மனநிலையில் அமர்ந்திருப்போர் சிலர். இந்த ஆண்டாவது நம்மைக் கண்டு கொள்ளுமா? என்று பதின்ம வயதினரின் எதிர்பார்ப்பும் பரபரப்பும் கலந்த மனநிலையில் இன்னும் சிலர். இப...