நீரளவே ஆகுமாம் நீராம்பல்...
நீரளவே ஆகுமாம் நீராம்பல்... ஔவை என்றதும் கையில் கோலூன்றிய பாட்டி ஒருவர் கண்முன் வந்து நிற்பார். முதல் வகுப்பில் படித்த" அறம் செய விரும்பு'" " ஆறுவது சினம்" ...எல்லாம் மனதிற்குள் வரிசை கட்டி நின்று எட்டிப் பார்க்கும். "அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் " "ஆலயம் தொழுவது சாலவும் நன்று" என்று மனப்பாடம் செய்த பாடல் எல்லாம் ஓடி வந்து மறுபடியும் ஒருமுறை மனதிற்குள் ஒப்பித்துப் பார்க்க வைக்கும். மறுபடி மறுபடி எனைப்படி எனத் தூண்ட வைக்கும். ஔவை என்ற இந்தப் பாட்டிக்குள் எங்கிருந்து வந்தது இத்தனை பாடும் திறன் என வியக்க வைக்கும். இப்படி பார்த்து, படித்து மகிழ்ந்த பாடல்கள் எத்தனையோ எத்தனையோ உள்ளன. மூதுரையில் ஔவை எழுதிய முப்பது பாடல்களும் நல்ல விழுமியங்களை சொல்லித் தருவனவாக இருக்கும். மூதுரைக்கு வாக்குண்டாம் என்று இன்னொரு பெயரும் உண்டு. ஔவையின் இந்த வாக்கினை அதாவது பாடல்களைப் படிக்கப் படிக்க பாடலுக்குள் இருக்கும் சிலநுட்பமான உண்மைகள் தெரியவரும். அவற்றுள் மறுபடியும் என்னைப் படிக்க வைத்து , பாடலின் நுட்பத்தை அறிய வைத்து மகிழ்வித்தப் பாடல் இ...