பவளவிழா வாழ்த்து
பவளவிழா வாழ்த்து பொங்கு புனல் பொருநை நதிநடக்க அங்கம் தகதகக்க அருமருந்துநீர் மணக்க நெல்லை இராமையாபிள்ளை கோமதி இணை மடிசுமக்க மெல்ல சிரித்தாள் செந்தாமரையாள் ஞானம் முகம் சிவக்க! கண்டேன் சீதையை என மன்னன் செல்லப்பா நெகிழ்ந்திருக்க மங்கை நல்லாள் நாணிமுகம் கோணி நிற்க இல்லறத்தில் இணைந்திருக்க இருவரும் விழைந்திருக்க இனிதாய் வளைகரம் பற்றினார் மணம் முடிக்க! இல்லற சாட்சி முன்னுரை எழுதி வைக்க நன்மக்கள் நால்வர் பிறந்தார் புதுக்கவிதை வரைந்து வைக்க நல்லதோர் கூட்டாட்சி இல்லத்தில் கூடியிருக்க நல்லாட்சி செய்தார் பிள்ளைகள் நனி சிறக்க! ஆசிரியர் பணிக்காய் முல்லுண்டில் கால் பதிக்க தொடர் ஓட்டம் பவாய் மாதுங்கா பேண்டி பஜாரெனப் பயணிக்க தலைமையாய் மகுடம் சூட்டி முல்லுண்ட் அணியம் சேர்க்க பணி நிறைவு செய்தார் நற்பெயர் நாளும் நிலைக்க! இவரின்.... குன்றா மொழிப் புலமை கண்டு நான் மலைக்க மண்டும் மதிகண்டு வான்மதியை கார்மேகம் தான் மறைக்க பார்த்தேன் பாத்தேன் படித்தேன் என உள்ளம் குதுகலிக்க படி தேன்உண்டு ...