கல்வி அழகே அழகு
கல்வி அழகே அழகு ஒருவன் தன் வாழ்வில் கிடைத்த மிகப் பெரிய செல்வமாகக் கருதுவது கல்விச் செல்வமாகும். கல்வியை ஒருமுறை பெற்றுவிட்டால் வாழ்நாள் முழுவதும் கூடவே வரும். என்னிடம் நிறைய கல்வி இருக்கிறது. யாராவது களவாடி சென்று விடுவார்களோ ? அச்சமே வேண்டாம். விலைமதிப்பற்ற பொருளைக் கூடவே வைத்துக் கொண்டு கவலை இல்லாமல் நிம்மதியாகத் தூங்கலாம். ஐயோ பெருமழை வந்துவிட்டதே.... வெள்ளம் வந்து அடித்துச் சென்றுவிடுமோ ? அஞ்ச வேண்டாம். அக்கம்பக்கத்தில் தீவிபத்து ஏற்பட்டு விட்டதே . என் கல்வி எரிந்து சாம்பலாகிவிடுமோ? நினைத்து நினைத்து வெதும்பிக் கிடக்க வேண்டாம். எப்போது நான் உங்களுடையவள் ஆகிவிட்டேனோ இனி எப்போதும் உங்களுடையவள்தான். எந்த ஒரு சக்தியாலும் உங்களிடமிருந்து என்னைப் பிரிக்க முடியாது . பிரிக்க முடியாத பந்தம் உங்களுக்கும் எனக்கும் உண்டு என்கிறது கல்வி. இதையேத்தான் விவேக சிந்தாமணி ஆசிரியர் வெள்ளத்தால் போகாது வெந்தணலால் வேகாது வேந்தராலும் கொள்ளத்தான் முடியாது கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது கள்ளர்க்கோ மிக அரிது காவலோ மிக எளிது கல்வி என்னும் உள்ளத்தே பொருளிருக்க ...