Posts

Showing posts with the label இடும்பைக்கு இடும்பை இயலுடம்பு -நல்வழி

இடும்பைக்கு இடும்பை இயலுடம்பு

இடும்பைக்கு இடும்பை இயலுடம்பு " காயமே இது பொய்யடா காற்றடைத்தப் பையடா " என்றார்  ஒரு சித்தர். ஆனால் , காயமே இது மெய்யடா அதில் கண்ணும் கருத்தும் வைய்யடா" என்று விளையாட்டு பண்ணிக்கொண்டிருக்கிறோம். இந்த உடம்பு பொய். இது மெய்யென்று நினைத்து அதனைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். உடம்பில் நிரப்பி வைக்கப்பட்ட காற்று இனி நான் உனக்குச் சொந்தமில்லை என்று வெளியேறிவிட்டால்.... மறுகணமே நம் பெயர் மாறிப் போகும். பிணம் என்று மறுபெயர் சூட்டி மூலையில் வைத்துவிடுவர். வருவோர் போவோர் எல்லாம் பிணத்தை எப்போது எடுக்கப் போறீங்க என்று கேட்க ஆரம்பித்து விடுவார்கள். பூத்த பூ வாடி கீழே விழுந்து மாய்ந்து போவது போல இந்த உடம்பும் மாய்ந்து போவது உறுதி. வீசிய காற்று மறுபடியும் நம்மை வந்து தொடாது என்பதை நம்புகிற நாம் இந்த வாழ்வு நிரந்தரமற்றது என்பதை நம்ப மறுத்து விடுகிறோம். அதனால்தான் அழகை ஆராதிக்கிறோம். நான் ,எனது என்று ஒரு சுயநல வட்டத்திற்குள் நின்று ஆடுகிறோம். ஆட்டம் போடுகிறோம். " நெருநல்  உளனொருவன் இன்று இல்லை என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு" என்றார் வள்ளுவர். ஆம். நேற்று இருந்தவர் இன்று உயிரோட...