பாவேந்தர் பாரதிதாசன்
பாவேந்தர் பாரதிதாசன் தலைசிறந்த தமிழ் அறிஞர்கள் வரிசையில் முதல் வரிசையில் முத்தாய்ப்பாய் அமர வைத்து அழகு பார்க்கப்படுபவர் பாரதிதாசன். " தமிழுக்கு அமுதென்று பேர் அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்" என்ற தேன் சொட்டும் பாடல் வரிகளுக்குச் சொந்தக்காரர். கனகசபை ,இலக்குமி அம்மாள் இணையர் பெற்ற கவின் பிள்ளை கவிதைப்பிள்ளையாக மாறிய வரலாறு சுவாரசியமானது. பத்து வயதிலேயே கவிதை எழுதும் ஆர்வம் கொண்டவர்.பாரதியார் பாடல்களை நண்பர்களிடம் பாடிக் காட்டி மகிழ்ந்து வருவது வழக்கம். ஒருநாள் ஒரு திருமண வீட்டில் மேடையில் பாடல் பாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்தத் திருமண வீட்டிற்கு பாரதியும் வந்திருந்தார். மேடையில் பாரதியார் பாடலைப் பாடினார் கனக சுப்புரத்தினம். பாடலைக் கேட்ட பாரதியார் தன் நண்பர்கள் மத்தியில் மறுபடியும்...