தீவக அணி என்றால் என்ன
தீவக அணி என்றால் என்ன தீவகம் என்றால் விளக்கு என்று பொருள். அறையின் ஒரு இடத்தில் வைக்கப்பட்டுள்ள விளக்கானது அவ்வறை முழுவதும் வெளிச்சம் தந்து விளக்குதல் போலச் செய்யுளின் ஓரிடத்தில் வரும் ஒரே ஒருசொல் அச்செய்யுளின் பல இடங்களுக்களிலும் உள்ள சொற்களோடு சென்று பொருந்திப் பொருளை விளங்குவதால் இவ்வணி தீவக அணி எனப்படுகிறது. " குணம் தொழில் சாதி பொருள் குறித்து ஒருசொல் ஒருவயின் நின்றும் பல்வயின் பொருள் தரின் தீவகம் செய்யுள் மூவிடத்து இயலும்" என்கிறது தண்டியலங்காரம். ஒரு குணத்தையோ தொழிலையோ இனத்தையோ பொருளையோ குறிக்கும் ஒரு சொல் செய்யுளின் ஓரிடத்தில் நின்று அச்செய்யுளில் பல இடங்களிலும் உள்ள சொற்களோடு சென்று பொருந்திப் பொருளைத் தருவது தீவகம் என்பது தீவக அணிக்குத் தண்டியலங்காரம் தரும் இலக்கணமாகும். தீவக அணி மூன்று வகைப்படும். 1. முதல் நிலைத் தீவக அணி 2. இடைநிலைத் தீவக அணி 3. கடைநிலைத் தீவகம அணி 1. முதல் நிலைத் தீவக அணி: பாடலில் தீவகமாக வரும் சொல் முதலில் வந்தால் அது முதல்நிலைத் தீவக அணி எனப்படும். ...