வெல்லும் சொல்
வெல்லும் சொல் சொல்லைப் பற்றி எங்களிடமேயா? அட...போங்கங்க... நாங்கள் சொல்லுவதையும் சொல்லுவோம். சொல்லாததையும் கூட சொல்லுவோமில்ல... கூட்டிச் சொல்லணுமா?கழித்துச் சொல்லணுமா? பெருக்கிச் சொல்லணுமா ? வகுத்துச் சொல்லணுமா? எல்லாம் கணக்குப் போட்டு பேசுவோமில்ல... கணக்குப் போட்டுப் பேசுவது எல்லாம் சரிதான். கணக்கில்லாமல் பேசிவிட்டு பேந்த பேந்த என்று எத்தனை இடங்களில் விழித்திருப்போம். " ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே கண்டதைச் சொல்லி நாவினைக் கடித்த நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே" மனதிற்குள் இந்த பாடல் ஓடுவதுபோல் கேட்கிறதே. ...