Posts

Showing posts with the label அம்மிக்கல்-மலரும் நினைவுகள்

அம்மிக்கல்

அம்மிக்கல் கோபம் வந்தால் சிலருக்கு  என்ன பேசுவது என்றே தெரியாது. அம்மிக் கல்லில் வைத்து அரைக்க விட்டால்தான் நீயெல்லாம் அடங்குவாய் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கலாம். அம்மிக்கல்லே இல்லை. இதில் எங்கே அம்மிக்கல்லில்  அரைக்க விடுவது? வழக்கொழிந்துபோன ஒரு பொருள் இன்றும் நம் பேச்சைவிட்டு வழக்கொழிந்து போகாமல் தொடர்ந்து நம்மோடு  பயணித்துக் கொண்டிருக்கிறது.    அப்படியானால் அந்த அம்மிக்கல்   எங்கோ நம் ஆழ்மனதில் பதிந்துபோன   ஒரு சொல்லாகத்தான்   இருந்து கொண்டிருக்கிறது.  அம்மிக்கல்லில் அரைக்க விடுவேன்  என்பது தவறான சொல்லா....?  அப்படியானால் நமக்குத் தண்டனை   தருவதற்காகத்தான் நம்மை அம்மிக் கல்லில்  அரைக்க வைத்தார்களா...?  இப்படி என்னென்னவோ எண்ணங்கள் நம்  சிந்தையில் எழலாம்.    எது எப்படியோ அம்மிக்கல்லில் அரைத்தல்  என்பது ஒரு கலை.  அது அம்மியில் அரைத்தவர்களுக்குத்தான்  தெரியும்.  எத்தனையோ சுவைகளையும் சுகங்களையும்  தொலைத்துக் கொண்டு இன்றைய  ஆடம்பரங்களை அனுபவித்துக் கொண...