கல்வி கரையில கற்பவர் நாள்சில....
கல்வி கரையில கற்பவர் நாள்சில.... " ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவர்க்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து " ஒரு பிறவியில் பெற்ற கல்வி ஏழேழு பிறவிக்கும் பாதுகாப்பாக வரும். ஆதலால் கற்க வேண்டும் என்றார் வள்ளுவர். " கற்கை நன்றே கற்கை நன்றை பிச்சைப் புகினும் கற்கை நன்றே " கற்றல் நன்மை தருவது. ஆதலால் இரந்தாவது கற்றுவிடுங்கள் என்றார் ஔவையார். " கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு " ஆதலால் கற்றுக் கொண்டே இருங்கள் என்றார் ஔவை. இதற்கும் ஒருபடி மேலே போய், " இம்மை பயக்குமால் ஈயக்குறை வின்றால் தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால் எம்மை யுலகத்தும் யாங்காணேம் கல்விபோல் மம்மர் அறுக்கும் மருந்து " என்கிறது நாலடியார். ஒருமுறை கல்வி கற்றுவிட்டால் அதற்கு அழிவே கிடையாது.கல்வியைப் போன்று அறியாமையை ஒழிக்கும் மருந்து வேறு எந்த உலகத்திலும் கிடைக்காது. ஆதலால் படியுங்கள் . இப்படி கல்வியைப் பற்றி பாடியவருக்கு அதோடு நிறுத்திவிட மனமில்லை. நம்ம பாட்டுக்கு படியுங்கள்...படியுங்கள் என்று சொல்லிவிட்டோம். எப்படி படிக்க வேண்டும்? என்று சொல்லித்தரவில...