Posts

Showing posts with the label வெறுங்கை என்பது மூடத்தனம்

வெறுங்கை என்பது மூடத்தனம்

  வெறுங்கை என்பது மூடத்தனம் " இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகு இயற்றியான்" என்றார் வள்ளுவர்.இறைவன் யாரையும் யாசித்து உயிர் வாழ வேண்டும் என்று படைக்கவில்லை.அப்படியே படைத்திருந்தால் கடவுளே பிச்சை எடுத்து அல்லல் பட்டு கெட்டுப் போகட்டும் என்கிறது திருக்குறள். கை இருப்பவன் யாசிப்பதை வழமையாக்கி கையேந்தி இருக்கிறான்.கைகள் இல்லா உழைப்பாளியிடம் யாசகம் கேட்கிறான். கையில்லாதவனிடம் கைகளை நீட்டி பிச்சை கேட்கிறான். இல்லாதவனிடம் இருப்பவன் இரந்து நிற்கிறான். இது அன்றாடம் பொது இடங்களில் காணும் காட்சி. என்ன ஒரு வேடிக்கை!         " மாற்றுத்திறனாளிகள் நாங்கள்; மாற்றம் காணும் திறனாளிகள் நாங்கள்"    என்பதை மெய்ப்பிக்கும் மனிதர்கள் எத்தனை எத்தனை பேர்! கூன் ,குருடு, செவிடு இல்லா அரிதான மானிடப்பிறவியைப் பெற்றும்  மனதில் ஊனம் இருந்தால் வறுமைதான் மிஞ்சும் "என்பதை உணர்த்த அன்றாடம் பிறரிடம் கையேந்தி வாழ்பவர்கள் எத்தனை பேர்! வலி தந்த வலிமை வாழ்க்கைப் பயணத்தின் புதிய அத்தியாயத்தை எழுத வைக்கு...