Posts

Showing posts from November, 2022

கிறிஸ்துமஸ் மரம்

Image
கிறிஸ்துமஸ் மரம்  டிசம்பர் வந்ததும் கிறிஸ்துமஸ்  கொண்டாட்டங்களுக்கான ஆயத்தப் பணிகள் களைகட்டத் தொடங்கிவிடும். எவ்வளவுதான் அலங்காரங்கள்  செய்திருந்தாலும் அதில் கூடுதல் சிறப்பாக இருப்பது கிறிஸ்துமஸ் மரம். கிறிஸ்துமஸ் மரம் இல்லாது கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் முழுமை பெறாது.  அது என்ன கிறிஸ்துமஸ் மரம்? அதில் அப்படி என்னதான் சிறப்பு இருக்கிறது?   அது எதற்காக வைக்கப்படுகிறது? அதன் வரலாறு என்ன? பின்னணி என்ன? என்று ஆயிரம்  கேள்விகள் வரிசைகட்டி வந்து நிற்கின்றன. இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் விடை காண வேண்டும் என்றால் வரலாற்றைத் திரும்பிப் பார்க்க வேண்டும். அது பற்றி வழிவழியாக சொல்லப்பட்டு வரும் செய்திகளில் இருக்கும் உண்மைகளை அறிய வேண்டும். வாருங்கள் கிறிஸ்துமஸ் மரம் பற்றிய செய்திகளை அறிந்துகொள்வோம். கிறிஸ்துமஸ் மரம் பற்றிய கதைகள் பல உண்டு. அவற்றுள் முதன்மையாகச் சொல்லப்படும் ஒரு கதையின் நாயகன் ஜெர்மனி நாட்டைச் சார்ந்த  போனிபோஸ் என்ற பாதிரியார். ஒருமுறை போனிபோஸ் ஜெபக்கூட்டத்திற்காக பக்கத்து ஊருக்குப் சென்றிருந்தார். ஜெபக்கூட்டம் முடிந்து வரும் வழியில...

கான மயிலாட....

Image
கான மயிலாட.... ஒருநாள் காட்டுவழியாக வந்து  கொண்டிருக்கிறார் ஔவை. மழை மேகம் திரண்டு வர மழை வந்துவிடுமோ என்று ஒதுங்குவதற்காக அங்குமிங்கும் பார்க்கிறார். அங்கே ஓர் அழகிய காட்சி. மயில் ஒன்று மழை மேகம் கண்டு தன் தோகையை விரித்து ஆடிக்கொண்டிருக்கிறது. கண்கள் விரிய அந்த காட்சியைக் கண்டு மகிழ்கிறார். திடீரென்று மறுபக்கத்திலிருந்து ஒரு சலசலப்பு. அங்கே இன்னொரு காட்சி அவரது கவனத்தை ஈர்க்கிறது. வான்கோழி ஒன்று  தனது உடலைச் சிலுப்பிக்  கொண்டிருக்கிறது. உனக்கு மட்டும் தான் தோகை இருக்கிறதா? இதோ பார். எனக்கும்தான்  தோகை இருக்கிறது நானும் தோகையை விரித்து  ஆடுகிறேன் பார் என்று மயிலுக்குச் சவால் விடுவதுபோல் தோகையை  விரிப்பதற்காக உடம்பு முழுவதையும் அசைத்து அசைத்து  ஆட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறது. முடியவில்லை. எத்தனை முயற்சி செய்தும் வான்கோழியால் மயிலைப் போன்று தோகையை விரித்து ஆட முடியவில்லை. மயிலைப் பார்த்துதான் இப்படி ஆட்டிக்கொண்டு நிற்கிறாயா? என்று நினைத்ததும் ஔவைக்கு உள்ளுக்குள் சிரிப்பு. கூடவே மற்றொரு சிந்தனை. இந்த வான்கோழியின் செயல்  ஏதோ ஒன்றை நினை...

தத்தித்தா தூதுதி தாதூதி....

தத்தித்தா தூதுதி தாதூதி.... கார்மேகம் திரண்டால் மழை கொட்டும். காளமேகம் வந்தால் கவி மழைப்  பொழியும். எதைப் பார்த்தாலும் பாடல். எந்தச் சொல்லைக் கொடுத்தாலும் கருத்தோடு பாடல் துள்ளி வந்து முன் நிற்கும். இதுதான் காளமேகம். சொல் இருந்தால்தானே பாடல் எழுதமுடியும்? என்று வெறும் எழுத்தைக் கொடுத்துப்  பார்த்து வேடிக்கைப் பார்க்க  நினைத்தனர் சிலர். அட போங்கைய்யா... எழுத்தை வைத்துத்தானே உங்களுக்குப் பாடல் வேண்டும். தகர வரிசையில் பாடட்டுமா? இதோ பெற்றுக் கொள்ளுங்கள் என்று பாடி நம் கரங்களில் தந்துவிட்டார். தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது?  என்று முற்றிலும் தகர  வருக்கத்தில் எழுதி  ஊதித் தள்ளிவிட்டுப்   போய்விட்டார் காளமேகம். சும்மா தத்தித்தா..... தித்தித்தா என்று சொல்லி விட்டால் நீரென்ன பெரிய ஆள் என்று நினைத்துவிடுவோமா என்ன? பொருள் வேணுமைய்யா....பொருள். நின்று சொல்லி விட்டுப் போவும் என்று காளமேகத்தை நிறுத்திக் கேட்க... பொருள் தானே வேண்டும். இந்தக் காளமேகத்தின் பாடலில் ...

பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர்......

பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர்.... " பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர் "                       குறள் : 580 பெய - ஊற்றுதலை கண்டும் - பார்த்தும்  நஞ்சுண்டு- நஞ்சினைக் குடித்து அமைவர் -அமைதியாய் இருப்பர் நயத்தக்க - விரும்பத்தக்க நாகரிகம்- உயர்ந்த பண்பு வேண்டுபவர்-  விரும்புபவர் விரும்பத்தக்க நல்ல நாகரிகம் தெரிந்த ஒருவர் தன்னுடன் பழகிய நண்பர் நஞ்சினை இடுவதைப் பார்த்த பின்னரும் அதனைத் தான்உண்டு  அமைதியாக இருந்துகொள்வார். விளக்கம்: பழகியவர் எது செய்தாலும் மறுப்பு சொல்லாமல் செய்யும் பண்பு சிலரிடம் இருக்கும். இது அவர் மீது நாம் கொண்டுள்ள அதிகப்படியான நம்பிக்கையின் வெளிப்பாடு. அவர் எந்தத் தீங்கும் செய்யமாட்டார் என்று அவர் பேரில் வைத்திருக்கும் நல்லெண்ணம். ஆனால் எல்லா நேரங்களிலும் நண்பர் நல்லவராக இருப்பார் என்று நம்ப முடியாது. சில நேரங்களில் அவர் உள்ளம் நமக்கு எதிரான சிந்தனை கொண்டிருக்கலாம். நமக்கு எதிரான தவறான செயல்களில் ஈடுபடுபவராக இருக்கலாம்.    நம் கண்முன்னே நஞ்சினை ஊற்றித் தருகிறார் நண்பர...

குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்.....

குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்.... " குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு "                    குறள் : 544 குடி- குடிமக்கள் தழீஇ - அணைத்துக்கொண்டு கோலோச்சும் - நல்லாட்சி செய்யும் மாநில  - பெரிய நிலத்தின் மன்னன்- ஆட்சியாளன் அடி - வழியில் தழீஇ - பொருந்தி நிற்கும்- நிலைத்திருப்பர் உலகு - உலகத்தவர் குடிமக்களை அன்போடு அணைத்து அவர்கள் நலன் கருதி நல்லாட்சி செய்யும்  அரசனைப் பற்றிக்கொண்டு  அவன் வழியில் அந்நாட்டு மக்கள் அணிவகுத்து நிற்பர். விளக்கம் : மன்னன் என்றால் நாட்டு மக்கள் நலனில் அக்கறை கொண்டவனாக இருக்க வேண்டும். நாட்டு மக்களை அரவணைத்துச் செல்லும் பண்பு இருக்க வேண்டும்.   அவர்கள்‌ இன்பதுன்பங்களில் பங்கெடுத்துக் கொள்ளும் உயர்பண்பு இருக்க வேண்டும். துன்பம் கண்டவிடத்து துயர் துடைக்க ஓடிவரும் கண்ணோட்டம் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு நல்ல ஆட்சியாளன் கிடைத்துவிட்டால்....? மக்கள் மனம் மன்னனைக் கொண்டாடும். மன்னனுக்கு நாட்டு மக்கள் மனதில் ஓர் நிலையான கிடைத்துவிடும். மன்னனை அணுகி தங்கள் குறைகளை எளிதாக ...

இரட்டையர்களின் சிலேடைப் பாடல்

இரட்டையர்களின் சிலேடைப் பாடல்  சொல்விளையாட்டு வெறுமனே விளையாடிவிட்டுப் போவதற்கு அல்ல. அடுத்தது என்ன...?அடுத்தது என்ன ? என்ற ஒரு கேள்வியைத் கேட்க வைக்கும். அதற்கான விடையைத் தேட வைக்கும். திருத்தமுறச் சொல்ல வேண்டும்  என்று சொற்களைச் சொல்லிப் பார்க்க வைக்கும். தொடர்புடைய சொற்கள், குழப்பம் ஏற்படுத்த வைக்கும் சொற்கள் எவை என்று தமிழ்ச் சொற்கள் அத்தனையையும் அலசி ஆராய வைக்கும். இது விளையாடும்போது புரியாது. விளையாடி முடித்த பின்னர் எத்தனை புதிய சொற்கள் படித்திருக்கிறோம் என்று வியக்க வைக்கும். ஒரே சொல்லுக்கு வேறுவேறு  பொருள் உள்ள சொற்களையெல்லாம் தேட வைக்கும். அவற்றைச் சொற்றொடர்களில் அமைத்து சொற்றொடர்கள் எழுதும் பயிற்சி களமாக இருக்கும். சாதாரண சொல் விளையாட்டில் இத்தனை நன்மைகள் இருப்பதை  அறியாமலேயே விளையாடியிருப்போம். சிலேடை என்று புரியாமலேயே இலக்கணம் படித்திருக்கிறோம். புலமையை வளர்த்திருக்கிறோம். இந்தப் புலமை தாய்மொழியில்தான் அதிகம்  இருக்கும் . கேள்வியும் பதிலுமாக அமைந்தப்  பாடல்கள் ஏராளமாகப் பாடி விளையாடியிருப்போம். இத்தகையப் பாடல்கள் வெறும் விளையாட்டுக்காக மட்டும் ...

முற்பகல் செய்யின்....

முற்பகல் செய்யின்..... காகம் ஒன்று மாமரத்தில் கூடு கட்டியது.        தான் கட்டிய இந்தக் கூட்டில்  முட்டைகள் இட்டு   குஞ்சுகளோடு மகிழ்ச்சியாக வாழ வேண்டும்  என்ற கனவோடு கூட்டைப் பார்த்துப் பார்த்து  மகிழ்ந்து வந்தது.     ஒரு நாள் எங்கிருந்தோ வந்த   குரங்கு ஒன்று மரத்திற்கு மரம் தாவி   விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தது.     விளையாடியபோது  மரத்திலிருந்த   காகத்தின் கூட்டினைக் குரங்கு   பார்த்துவிட்டது.      கூடு ஒன்று மரத்தில் இருப்பதைக் கண்டதும்    உற்சாக மிகுதியால் கூடுதல் ஆட்டம் போட்டது.   தாவித்தாவி கூட்டிற்கு அருகில் சென்றது. கூட்டினுள் எட்டிப் பார்த்தது.   கூட்டினுள் யாரும் இல்லை.   யாரும் இல்லாத போது விளையாடினால்    என்ன மகிழ்ச்சி கிடைக்கப் போகிறது ?        சற்று நேரம் அப்படியே உட்கார்ந்து     அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டிருந்து.   அப்போது எதிரில் நிற்கும் ஒரு     கொய...

இன்னா செய்யாமை என்னும் அறம்

இன்னா செய்யாமை என்னும் அறம் முன்னுரை :   "  தீயவை தீய பயத்தலால் தீயவை     தீயினும் அஞ்சப் படும்" என்பார் வள்ளுவர். தீயைவிட அச்சம் தருவது தீமை. அச்சம் தரும் ஒரு செயலை செய்வது நம்மையும் அச்சத்தோடு வாழும் நிலைமைக்குத் தள்ளிவிடும்.தீயவை தீமை தருவதால் தீயவற்றிலிருந்து விலகியிருப்போம்.அதுதான் அறம். அதனைப்பற்றி இக்கட்டுரையில் காண்போம். இன்னா என்றால் என்ன? "எவற்றையெல்லாம் பிறர்  உனக்குச் செய்யக்கூடாது என்று நீ நினைக்கிறாயோ எவை எல்லாம் உன்னை துன்பப்படுத்தும் என்று எண்ணுகிறாயோ அவை எல்லாம் இன்னாததாகவே கருதப்படும். உன்னைத் துன்பப்படுத்தும் செயல் அடுத்தவரையும் துன்பப்படுத்தும். உன்னைக் காயப்படுத்தும் சொற்கள் பிறரையும் காயப்படுத்தும். அவைதான் இன்னாதவை. இன்னா செய்யாமை என்பது  யாதொரு உயிர்க்கும் தீங்கு செய்யாதிருத்தல்  என்பதாகும். பொறாமையின் வெளிப்பாடு: இன்னா என்பது எதனுடைய வெளிப்பாடாக இருக்கும் என்ற ஆய்வு மேற்கொண்டால் பெரும்பாலும் அது பொறாமையின் வெளிப்பாடு என்பதன்றி வேறொன்றுமில்லை. " கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா செய்யாமை மாற்றார் கோள் " என்பது வள்ளுவர் கர...

சாதி இரண்டொழிய வேறில்லை....

சாதி இரண்டொழிய வேறில்லை.... வீதிக்கொரு  சாதி பெயர். ஊருக்கொரு சாதி சங்கம். பெயருக்குப் பின்னால் சாதி பெயர். இப்படியாக சமீப காலமாக சாதியைப் பற்றிய பிரச்சாரங்களும் முன்னிறுத்தல்களும்  அதிகரித்துக்கொண்டே வருகின்றன. காரணம் என்ன? என்ற ஆய்வு தேவை இல்லை. ஆராய்ந்து எந்தப் பயனுமில்லை. ஆனால் நல்ல கருத்துக்கள் நாளும் விதைக்கப்பட வேண்டும். பயிற்றுவிக்கப்பட வேண்டும். அப்போதுதான் சாதிய வன்மங்களை ஓரளவு கட்டுப்படுத்த முடியும். " பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்றார் வள்ளுவர். " சாதிகள் இல்லையடி பாப்பா குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்" என்றார் பாரதி. " உலகினில் சாதிகள் இல்லை -என் உள்ளத்தில் வேற்றுமை இல்லை கலகத்தைச் செய்கின்ற சாதி- என் கைகளைப் பற்றி இழுப்பதும் உண்டோ?" என்று கேட்டவர் பாரதிதாசன். " தர்மத்தின் கூர்மையோடே  எவனோ செய்தான் சாதியை" என்று அறச்சீற்றம் கொள்வார் பாவலரேறு பெருஞ்சித்திரனார். இப்படி சாதி என்பது தேவையில்லாத ஒன்று என்பது ஆன்றோர் கருத்து. அறிந்தோர் கருத்து. அறம்சார் நன்மக்கள் கருத்து. இவர்கள் எல்லாம் சாதி இல்லை...இல்லை என்று பேசியிருக்கும்ப...

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை.....

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை.... வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க நன்றி பயவா வினை"                                குறள் :    439       வியவற்க - தற்பெருமை கொள்ளாதிருப்பீராக எஞ்ஞான்றும் - எந்த நிலையிலும், எப்போதும் தன்னை- தன்னைப்பற்றி நயவற்க - விருப்பம் கொள்ளாதிருப்பீராக நன்றி- நன்மை பயவா- விளைவிக்காத வினை - செயல் தன்னைப்பற்றி வியந்து எந்த நிலையிலும் பெருமை கொள்ளாதிருப்பீராக. அதுபோல நன்மை விளைவிக்காத எந்தச் செயலைச் செய்யவும் விரும்பாதிருப்பீராக. விளக்கம் : ஒருவன் தன்னை ஒருபோதும் உயர்வாக எண்ணக்கூடாது. உயர் பதவியில் இருப்பவர்களாக இருக்கலாம். வசதி படைத்தவர்களாக இருங்கலாம். படித்தவர்களாக இருக்கலாம். உங்களின் இந்த நிலைக்காக இந்தச் சமூகம் உங்களுக்கு ஓர் உயர்வான இடத்தைக் கொடுக்கும். மறுப்பதற்கில்லை. ஆனால் நீங்கள் ஒருபோதும் உங்களை உயர்வாக எண்ணவிடக் கூடாது. நான் மற்றவர்களைவிட உயர...

பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்.....

பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்...... "பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின் அறம்நாணத் தக்கது உடைத்து"                            குறள் :     1018 பிறர் - அடுத்தவர் நாணத்தக்கது - வெட்கப்படத் தக்கது தான் - அவன் நாணான் - வெட்கப்பட மாட்டான் ஆயின்- ஆனால் அறம் - அறக்கடவுள்,நற்செயல் நாணத்தக்கது -வெட்கப்பட்டு நீங்கி உடைத்து- செல்லத் தக்கது ஒருவன் பிறர் வெட்கப்படத் தக்க  செயலைச் செய்துவிட்டு தான் வெட்கப்பாடாது இருப்பானாயின் அந்த அறமே அவனிடமிருந்து  வெட்கப்பட்டு நீங்கிச் செல்லும். விளக்கம் : பார்ப்பவர்,கேட்பவர் அனைவரும் ஒருவன் செய்யும் செயலைப் பார்த்து நாணி தலை குனிந்து நிற்கின்றனர். ஆனால் செய்தவனுக்கு அதைப் பற்றிய எந்தக் குற்ற உணர்வும் இல்லை. இப்படிப்பட்ட செயலைச் செய்து விட்டோமே என்ற அச்சமும் இல்லை. நாணமும் இல்லை. பிறர் பழியென்று நினைக்கிற காரியத்தை எந்தவித கூச்சமும் இல்லாது  திரும்பத் திரும்ப  செய்து கொண்டிருக்கிறான். இவனை நாம் என்ன செய்துவிட முடியும்? "துஷ்டனைக் கண்டால் தூர விலகு" என்பதுபோல ...