Posts

Showing posts with the label மன்னும் இமயமலை எங்கள் மலை -பாரதியார்

மன்னும் இமயமலை எங்கள் மலை

மன்னும் இமயமலை எங்கள் மலை  பாரதியாரின் பாடல்களில் நாட்டுப்பற்று மிகுந்திருக்கும். தேசியம் பற்றிய கருத்து இருக்கும். தமிழ்நாட்டுக்குள் முற்றிலும் முடங்கிக் கிடக்காமல் தேசிய நீரோட்டத்தின் மீதே அவர் கவிகளெனும் ஓடம் செல்வதைக் காணலாம். சுதந்திர போராட்டக் காலத்தில் வாழ்ந்தவர் ஆதலால் இந்தியர் ,இந்தியா என்று தேசிய பற்று இழையோடிய பாடல்கள் அதிகம். எம் இந்தியா என்று பெருமை கொள்ள எத்தனை எத்தனையோ உள்ளன. இலக்கியமா? ஆன்மீகமா? அறிவியலா? வானசாஸ்திரமா? எது இல்லை எங்கள் இந்தியாவில்? ஆறுகளில்லையா? மலைகளில்லையா? நிலவளங்களில்லையா?. எல்லாம் இருந்தும் ஏன் இன்னும் ஏழ்மை அகலவில்லை என்ற கேள்வி கேள்வியை எழுப்ப வைத்து சிந்திக்க வைக்கும் வரிகளுக்குச் சொந்தக்காரர் பாரதி.  எவை எவை நம்நாட்டின் பெருமை என்பது பாரதியின் பாடல்களைப் படிக்கும் போது புரியும். இத்தனைப் பெருமைமிகு நாட்டினர் நாம் என்பதை எண்ணி எண்ணி நம்மைப்  பூரிப்படைய வைக்கும். பாரதியாரின் தேசிய கீதங்கள் என்ற  தலைப்பின்கீழ் வரும் பாடல்கள் யாவும் நம்மை தேசியத்தின் மீது பற்று கொண்டிட வைக்கும். எங்கள் நாடு இதுவென  மார்தட்டிட வைக்கும். இமயமல...