நெடுநீர் மறவி மடிதுயில்....
நெடுநீர் மறவி மடிதுயில்..... நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன் " குறள் : 605 நெடுநீர் _ காலம் தாழ்த்துதல் மறவி _ மறதி மடி _ சோம்பல் தூக்கம் _ பெருந்தூக்கம் நான்கும் _ நாலும் கெடுநீரார் _ கெட்டுப்போகும் தன்மை உடையவர் காம _ விரும்பி கலன் _ அணி, மரக்கலன் காலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், பெருந்தூக்கம் ஆகிய இந்த நான்கும் கெட்டுப்போகும் இயல்புடையவர் விரும்பி ஏறிச் செல்லும் மரக்கலனாகும். விளக்கம் : நாளை நாளை என்று காலம் தாழ்த்தி ஒரு செயலைச் செய்யாது நீர்த்துப் போகச் செய்தல் அச்செயலைச் செய்ய விருப்பமின்மையைத்தான் காட்டுவதாக இருக்கும். மறந்து போய்விட்டது...மறந்து போய்விட்டது என்று எதுவுமே செய்யாமல் இருப்பது ஆர்வம் இல்லாமையால் நிகழும் நிகழ்வாகவே இருக்கும். சோம்பல் முட்டைக் கட்டி மூலையில் முடங்க வைத்துவிடும்.சோம்பேறியால் எதுவும் செய்ய முடியாது. சோம்பலில் முடங்கிக் கிடந்தால் பெருந்தூக்கம் பெருங்கரம் நீட்டி அணைத்துக் கொ...