கல்மீது கோபப்படலாமா
கல் மீது கோபப்படலாமா உயிரற்ற பொருட்கள் மீது கோபமா? யாரிடம் கோபம் கொள்ள வேண்டும்? எப்படிக் கோபப்பட வேண்டும்? எதற்காக கோபப்பட வேண்டும்? இப்படிப் பட்டியல் எழுதி வைத்துதான் கோபப்பட வேண்டுமா? "சினம் தவிர்" என்று படித்திருக்கிறோம். இது என்ன ? யாரிடம் கோபம் கொள்ள வேண்டும்? அப்படியானால் கோபம் கொள்ளலாமா என்ற கேள்வி குறுக்கே வந்து விடை கேட்டு நிற்கிறதல்லவா? கோபம் கொள்ளலாமா என்ற கேள்விக்கு விடை தேடும் முன்னர் கோபம் கொள்ளாதவர்கள் யார் என்று தேடியே ஆக வேண்டும். அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் அக்கம்பக்கத்தினர் என்று ஒவ்வொருவராக அலசிப் பார்த்தால்.... யாராவது கிடைக்கிறார்களா? இல்லையே....ஒவ்வொருவரும் ஏதோ ஒரு காரணத்திற்காக யாரிடமாவது கோபப்பட்டவர்களாக இருக்கிறார்கள். ஏன் நான் இல்லையா? நான் யாரிடமும் கோபப்பட்டதில்லை. அதனால் யாரிடமும் சண்டையிடதில்லை என்று கையை உயர்த்திக்கொண்டே ஒருவர் ஓடி வந்தார். யாரிவர் என்று திரும்பிப் பார்த்தேன். அதற்குள் காலில் கல் இடறி ஆ...அம்மா என்று குரல் கொடுத்தபடி கீழே விழுந்தார். உடனே அவருக்கு கோபம் என்றால் கோபம் செம கோபம். கல்லை முறைத்தபடி சற்று நேரம் அப்படியே கீழே ...