விருது வழங்கும் விழா
விருது வழங்கும் விழா மாதுங்கா பள்ளிக்கு அகவை நூறு வாழ்த்துச் செய்தியோடு மெல்ல எட்டிப்பார்க்க உதடுகள் மெல்லச் சிரிக்க 'வாங்க ' குரல் தேனாய் இனிக்க கண்கள் ஆலாய்ப் பறக்க காட்சிகள் வியக்க வைக்க பதாகை விரிய விழா தொடங்க வரவேற்புரையால் ஜெரோம் ஆசிரியர் செவிப்பறையைச் சிலிர்க்க வைக்க ஆசிரியர் பாலன் அவர்கள் தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்க ஆசிரியை அனிதாவின் அன்பியல் பேச்சு எதிர்பார்ப்பை எகிற வைக்க தலைமை ஆசிரியை சந்திரிகா அவர்களின் பாட்டிடையிட்ட உரை நெஞ்சை அள்ள தலைமை ஆசிரியை ஞானம் அவர்களின் உரையிடையிட்ட கவிதை உள்ளத்தை அள்ள தலைமைஆசிரியைகள் மதுரம் மற்றும் லீலா ஸ்டீபன் அவர்களின் வாழ்த்துரைகளைக் கேட்டு மனம் துள்ள வில்லியம் ஆசிரியர் அவர்கள் மருத்துவ உரை மெய்மறக்க வைக்க அரங்கில் அதிர்வலை மிகுக்க உள்ளீடாய்ப் போட்டிகள் வந்து உவகையைக் கூட்டி நிற்க பரிசு பெற்றவர்கள் கால்கள் தரையில் ஊன்ற மறுத்துத் துள்ள வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் முகம் வாட மறுவாய்ப்பு கிடைக்குமென மனம் தேறுதல் கொள்ள உற்சாகக் கரவொலி வந்து இடைமறிக்க விருது பெறுவோர்க்கான அணிவகுப்பு விழாவுக்கு அணி சேர்க்க ஆசிரியர்...