கோபம் வேண்டும்
கோபம் வேண்டும் 'சினம் தவிர் 'என்றுதானே சொல்வார்கள். இது என்ன வேண்டும்...வேண்டும்... கோபம் வேண்டும். " சும்மாவே நான் காச் ...மூச் என்று கத்திவிட்டு கையில் கிடைத்ததை எல்லாம் தூக்கி வீசுவேன். எத்தனை போனை உடைத்திருக்கிறேன் தெரியுமா?"பெருமைப்பட்டுக் கொள்வது காதுகளில் கேட்கிறது. "இல்லை...இல்லை... நான் எல்லாம் ரொம்ப...ரொம்ப நல்ல பிள்ளை. ரிமோட் கண்ட்ரோலை மட்டும்தான் தூக்கி வீசுவேன்." இப்படியும் சிலர் பேசுவது போல் இருக்கிறது. " என்னிடம் இந்த உடைத்தல்...கிடைத்தல் எல்லாம் கிடையாது.கோபம் வந்தால் பேனாவால் நோட்டுப் புத்தகத்தில் கிறுக்கோ கிறுக்கென்று கிறுக்கி தள்ளி விடுவேன்." இது பள்ளி மாணவர்களின் கிறுக்கலாகத்தான் இருக்கும். மனிதர்களிலும் சிலர் இப்படி இருக்கலாம். "நாங்கள் எல்லாம் வேற...வேற... வேற மாதிரி. சும்மா நச்சு... நச்சுன்னு தலையணையில் நாலு குத்து குத்திவிட்டு அந்த இடத்தில் இருந்து எஸ்கேப் ஆகி விடுவோமில்ல..." ...