நளிமலை நாடன் நள்ளி
நளிமலை நாடன் நள்ளி புலவர் ஒருவர் கண்டீரம் நாட்டுக்குட்பட்ட தோட்டி மலைப் பகுதியில் வந்து கொண்டிருக்கிறார். காதுகள் அடைத்து கண் மங்குவதுபோல தெரிகிறது. கால்கள் தள்ளாடுகின்றன. இதற்குமேல் நடக்க முடியாது என்ற நிலை. நடக்கமுடியாமல் ஒரு பலாமரத்தடியில் அமர்ந்துவிடுகிறார். அப்போது வில்லும் அம்பும் எடுத்துக்கொண்டு வீரன் ஒருவன் அந்த வழியாக வருகிறான் பார்ப்பதற்கு வசதியான வீட்டுப் பிள்ளை போல தெரிகிறது. யாராயிருக்கும்?. இளவரசனாக இருப்பானோ? இருக்கலாம்....இளவரசனாக இருந்தால் ஒருவேளை உதவி கிடைக்கலாம் .இப்படி ஒரு எண்ணத்தில் புலவர் எழும்ப முயன்றார். இளைஞனும் புலவர்ரைப் பார்க்கிறான். பார்த்த மாத்திரத்தில் புலவரின் நிலைமை புரிந்து போகிறது. அதற்குள் புலவர் கையைக் குவித்துக்கொண்டே எழுந்தார். " ம்கூம்....அப்படியே இருங்கள்" என்று இருக்கச் செய்தான் இளைஞன். அவனுடன் வேட்டைக்கு வந்த மற்ற இளைஞர்கள் இன்னும் வந்து சேரவில்லை. அங்குமிங்கும் பார்த்த இளைஞன் தானே தன் கையால் தீயை மூட்டினன். தான் கொன்று கொண்டு வந்த மானின் தசையை அதிலே வாட்டினான். ...