துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித்...
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித்.... " துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை " - குறள் : 12 துப்பார்க்கு -உண்பவர்க்கு துப்பாய - வலிமை தருகின்ற துப்பு - உணவு ஆக்கி - ஆகும்படி செய்து,விளைவித்து துப்பார்க்கு - உண்பவர்க்கு, குடிப்பவர்க்கு துப்பாய - வலிமையாக தூஉம் - ஆவதும், பெய்து வருவதும் மழை - மழை உண்பவர்களுக்குத் தக்க உணவுப் பொருட்களை விளைவித்துத் தருவதோடு பருகுவார்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும். விளக்கம் : மழை இல்லை என்றால் உணவுமில்லை....உயிருமில்லை. மழையானது நாம் உண்ணும் உணவுப் பொருட்களான காய்கறிகள், தானியங்கள் யாவும் விளைவதற்குக் காரணகர்த்தாவாக இருக்கிறது..இப்படி துய்ப்பவர்க்கு உரிய உணவுப் பொருட்களை விளைவித்துத் தருவதோடு அவற்றை உண்பவர்க்கு தானும் துய்ப்பதற்கு உரிய ஒரு பொருளாக இருந்து வலிமை தரும் ந...