நேர்மறை எண்ணத்தை வளர்ப்போம்
நேர்மறை எண்ணத்தை வளர்ப்போம் "நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்"என்பார் சுவாமி விவேகானந்தர். நாம் பேசும் பேச்சு செயல் யாவும் நேர்மறையாக இருக்க வேண்டும். அப்போதுதான் நடப்பவையும் நன்றாகவே நடக்கும். * சூழ்நிலை சூழ்நிலை சரியாகவே இல்லை . நாம் அன்றாடம் காண்பவை யாவும் ஏறுக்குமாறாக ...தாறுமாறான நிகழ்வுகளாகவே இருக்கின்றன. கேட்பவை யாவும் சகிக்க முடியவில்லை. தரக்குறைவான சொற்கள். நம்மைச்சுற்றி நடப்பவை யாவும் விரும்பத் தகாததாகவும் தவறானதாகவுமே இருக்கிறது. இவை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் வாழ்கிற நம்மால் மட்டும் எப்படி நல்லவராக இருக்கமுடியும்?" இந்தக் கேள்வி அனைவர் மனதிலும் எழலாம். இவற்றை எல்லாம் கடந்து நம்மை நாமாக நிலைநிறுத்திக் கொள்வதுதானே சிறப்பு. * தாழ்வு மனப்பான்மை வேண்டாம் தாழ்வு மனப்பான்மையா... இது மட்டும் வேண்டவே வேண்டாங்க... அந்தத் தாழ்வு மனப்பான்மை என்னும் வில...