Posts

Showing posts with the label இலக்கியம்

வரப்புயர நீருயரும்.....

Image
                                            வரப்புயர நீருயரும்  வாழ்த்து அனுப்ப வார்த்தைகள் தேடினேன்.  பல்லாண்டு பல்லாண்டு .... பல்லாயிரம் ஆண்டு வாழ்க! என்று வாழ்த்துவாயாக என்று வாழ்த்து ஒன்று ஓடி வந்து உச்சந்தலையில்  உட்கார்ந்து கொண்டது. வேறு ஏதாவது வாழ்த்து கிடைக்குமா ? முடிந்த மட்டும் மண்டையை  உருட்டிப் பார்த்தேன். வாழ்க வளமுடன் ! வாழ்த்துச் சொல்லி மகிழ்க என்று மற்றுமொரு வாழ்த்து வரிசைக்கு வந்து நின்றது. இவ்வளவுதானா? வளமான மொழியான என்  தாய்த்தமிழில் வாழ்த்திட  வார்த்தைக்குப் பஞ்சமா?  இருக்காது..... இருக்கவும் கூடாது.  என் தலைச்சோற்றில் கற்பனைக்குப் பஞ்சம். விளைந்தது என் சொல்லில் கஞ்சம். விஞ்சும் சொற்கள் கிடைக்காதா  கொஞ்சமென மனம் கெஞ்ச  கண்கள் துஞ்ச மறுத்தன . முட்டி மோதிப் பார்க்கையில்  மண்டைக்குள் ஓர் ஒளிக்கீற்று  மின்னலாய் வந்து போக....  புரட்டிடு புறநானூற்றை என்றுரைத்தது மனம்.  வாழ்த்தொன்று நான் தேட பத்தா...

ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்

Image
ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் "ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்" என்ற சொற்றொடர் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால் தூது இலக்கியம் பற்றியும் சற்று தெரிந்து கொள்ள வேண்டும். நாரைவிடு தூது படிக்காமல் பள்ளிப் பருவத்தை யாரும் கடந்து வந்திருக்க முடியாது. ஆரம்பகாலத்தில்  காதலுக்காகவும் அரசர்கள் பிற நாட்டு மன்னர்களோடு தொடர்பில் இருப்பதற்காகவும் தூது அனுப்பப்பட்டு வந்ததாக அறிகிறோம்.  காதலுக்குத் தூது செல்வதற்கு என்றே  தலைவனும் தலைவியும் பாங்கனையும்  பாங்கியரையும் தங்கள் கூடவே வைத்திருப்பராம்.  சங்க இலக்கிய அகப்பாடல்களின் மூலம் காதல் தூதுவர்கள் பற்றி நாம் நிறைய  அறிந்து கொள்ளலாம். இருவரிடையே பேச்சு நிகழ்வதற்குத் துணையாக இருப்பவரைத் தூதுவர்  என்கிறோம். எல்லா நாட்டிற்கும் தூதரகங்கள் இருப்பதும் அங்கு அந்தந்த நாட்டு தூதர்கள்  அமர்ந்து மற்ற நாடுகளோடு பேச்சு வார்த்தையில் ஈடுபடுவதும் அரசியல் நிகழ்வாக நாளும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு செயல் என்பதைப் பற்றி அனைவருக்குமே தெரிந்திருக்கும். தூது இலக்கியம் தமிழ் இலக்கிய வரலாற்றில்...

அதியமான் ஔவை நட்பு

Image
   அதியமான் ஔவை நட்பு ஔவையைப்  பற்றி எழுதும் எவரும் அதியமானை விட்டுவிட்டு வெறுமனே ஔவையை மட்டும் எழுதிவிட்டு சென்றுவிட முடியாது. கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும் கொண்ட நட்பு எவ்வாறு தமிழ் இருக்கும்வரை எல்லோராலும் பேசப்படுமோ அது போன்றுதான் ஔவை அதியமான் நட்பும்  தமிழும் தமிழரும் இருக்கும் வரை பேசப்படும்.  அந்த அளவு உயர்வான நட்பு  அதியமான் ஔவை நட்பு. அதியமான் என்றதும் , "நெல்லி அமிழ்து விளை தீங்கனி ஔவைக்கு ஈந்த அதியன் " என்று சிறுபாணாற்றுப்படையில் நல்லூர் நத்தத்தனார் கூறுவது  நினைவுக்கு வரும். ஒருநாள் தனது அமைச்சர் மற்றும் படைகளோடு காட்டிற்குச் செல்கிறான் அதியமான் நெடுமான் அஞ்சி.  முட்செடிகளுக்கிடையே ஒரு நெல்லி மரம். அதில் அரிதாக ஒரே ஒரு  நெல்லிக்கனி கிடக்கிறது. மன்னனின் கண் எதேச்சையாக நெல்லிக்கனி மீது விழுகிறது.  மனதிற்குள் ஏதோ ஒரு கணக்குப் போட்டுப் பார்க்கிறான் மன்னன். மன்னனின் உள்ளக் கிடக்கையைப் புரிந்து கொண்ட வீரன் ஒருவன்  முட்செடிகளுக்கு இடையே நுழைந்து சென்று ,அதைப் பறித்து வந்து மன்னனிடம் தருகிறான் . " மன்னா! ...

படைப்பு பல படைத்து ...

Image
          படைப்பு பல படைத்து.... சங்கப் பாடல்களில் காதலும் வீரமும் நிரம்ப இருக்கும்.காதல் மட்டுமல்ல நல்ல கருத்துள்ள பாடல்கள் ஏராளம் உண்டு. படித்து படித்த இன்பறுத்தக்க கருத்தாழமிக்கப் பாடல்கள் உண்டு. உவமை நயங்கள் ஓவிங்களாக காட்சிகளை நம் கண்முன் கொண்டு நிறுத்தும். புலவர்களால் மட்டும்தான் பாட்டெழுதி பரிசில் வாங்கிச் செல்ல முடியுமா?  நாங்களும் புலவர்களுக்கு இணையாக பாடல் எழுதும் புலமை பெற்றவர்கள்தாம் என்று நிரூபித்த பல மன்னர்கள் உண்டு. வாழ்க்கையை அனுபவித்து மன்னர்கள் பாடிய பல பாடல்களைச்  சங்க இலக்கியத்தில் காணமுடியும். அறத்தோடு வாழ வேண்டும் என்று அறவுரைகளைத் தம் கவிதையில் தந்தனர். வீரத்தைப் புகழ்ந்து பாடி நம்மைப் பிரமிக்க வைத்துள்ளனர். இல்லறத்தைப் பாடி இனிமை தந்துள்ளனர். இவை எல்லாவற்றிற்கும் மேலாக சிறுபிள்ளையின் குறும்பை அப்படியே நம் கண்முன் படைக்கிறார்  ஒரு புலவர். இல்லை...இல்லை.  புலமை மிக்க ஒரு மன்னன். பாண்டியன் அறிவுடை நம்பி என்ற ஒரு  மன்னன்   உண்டு. அவர் பெயருக்கு ஏற்றபடியே நல்ல அறிவுடையவர். அ...

காளமேகத்தின் கவிமழை

Image
      காளமேகத்தின் கவிமழை       எண்ணற்ற  புலவர்கள் தமிழுக்குப் பெருமை சேர்த்துள்ளனர். அவர்களுள் தனிப்பிறவி எடுத்து வந்தவர் கவி காளமேகம் என்றால் மிகை ஆகாது. காளமேகம் பாடலைப் படிக்காமல் தமிழ் இலக்கியம் பற்றிப் பேச முடியாது. ஏன் கவிதைகூட எழுத முடியாது. தற்கால கவிஞர் அனைவருமே காளமேகம் பாடலில் மூழ்கி எழுந்தவர்களாக நொடிப்பொழுதில் பாடல் எழுதும் ஆற்றல் மிக்கவர். இதனால் இவரை ஆசு கவி என்று கூறுவர். சிலைடை கவி  அதாவது இரட்டை அர்த்தப் பாடல்கள் பாடவேண்டும் என்றால் காளமேகத்திற்குக்  கொண்டாட்டம். இவருடைய பாடல்களில் விவேகமும் இருக்கும். கூடவே குறும்பும் குசும்பும் கொஞ்சி விளையாடும். சொல்லில் பஞ்சம் இருந்தாலும் பொருளில் பஞ்சம் இருக்காது. இவரது இயற்பெயர் வரதன்.  சாதாரண வரதனாக இருந்தவர் காளமேகமாக மாறி கவிமழை பொழிவதற்குப் பின்னணியில் ஒரு சுவாரசியமான கதை உண்டு. இவர் ஒரு கோவிலில் உதவியாளராக வேலை  பார்த்து வந்தாராம். அப்போது கோவிலில் நாட்டியம் ஆடும் மோகனாங்கி என்ற பெண்மீது காதல் அரும்பியது. நாளாக ஆக காதல் தீராக்காதலாக மூண்டெழுந்தது. இருவரும் கோவில...

அரியது கேட்கின்...

Image
            அரியது எது?  "பாட்டி....பாட்டி.."        "என்னப்பா...   என்ன வேணும்..."       " அந்த  சுட்டப்பழம் .....நீங்கதானே பாட்டி.."     சிரித்துக் கொண்டே ஔவை,  "நான்தான்...இப்போ என்ன வேணும். உனக்கு?"என்றார்.      "அதியமான் நெடுமான் அஞ்சி  யாரு பாட்டி..?."      "வள்ளல்...குடிகாக்கும் மன்னன்."       "அவர் உங்களுக்கு கொடுத்த நெல்லிக்கனி...?"        "இனிமையானது....அரிதாகக் கிடைப்பது..."      "  அரிதாக கிடைப்பதா...?    அப்படியானால் இந்த உலகிலேயே அரிது    நெல்லிக்கனிதான் இல்லையா பாட்டி...?"     " உன் கேள்வியில் ஏதோ உள்நோக்கம் இருப்பதுபோல்  தெரிகிறதே.. வேறு ஏதாவது வேண்டுமா...?" "வேண்டும் பாட்டி ....வேண்டும். இந்த உலகில் அரிதானவை வேறு ஏதேனும் உண்டா என்று தெரிந்து  கொள்ள வேண்டும் பாட்டி" "ஏனில்லை...அரிதானது எது  என்றுதானே கேட்கிறாய்? சொல்கிறேன் கேள்....

உண்டி கொடுத்தோர்...

Image
          உண்டி கொடுத்தோர்.... பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் முதன்மை     வரிசையில் நிற்கும் பெருமை கொண்டது புறநானூறு.    புறநானூற்றில் இரண்டு பாடல்கள்     குடப்புலவியார் என்ற புலவர் பாடியுள்ளது.   இவர் பாடிய  இரண்டு பாடல்களுமே  பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடியதாக அமைந்துள்ளது.  பழங்காலத்தில் புலவர்கள் மன்னர்களைப் புகழ்ந்து பாடி  பரிசில் பெற்றுச் செல்வர்.  சில புலவர்கள் மன்னன் தவறு செய்யும் போது   இடித்துரைத்து நல்வழிப் படுத்துவதற்காகவும்  பாடியுள்ளனர்.  புலவர்கள் நல்ல அமைச்சராக இருந்து அரசியல்  நுணுக்கங்களைச் சொல்லித் தருவதற்காகவும்  பாடல்களைப் பயன்படுத்தியள்ளனர்.    இந்த உலகத்தில் நாம் துய்ப்பதற்கு   அவசியம் செல்வம் வேண்டும். வாழும் காலத்தில் புகழ்   வேண்டுமானால் செல்வத்தின்  மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.  இரண்டு உலகங்களின் புகழையும் பெற   வேண்டுமானால் மண்ணுலகில்  நீர்நிலைகளை ஏற்படுத்தி வளங்களைப்...

நட்ட கல்லை....

                      சிவவாக்கிய சித்தர் தமிழகத்தைச் சார்ந்த   பதினெண் சித்தர்கள்     சித்தர்களுள் தலையாயச் சித்தர்களாக கருதப்படுகின்றனர். இவர்கள் தவிர இன்னும் நூற்றுக்கணக்கான   சித்தர்கள் உள்ளனர். சித்தர்கள் தங்களுக்கென்று தனிப்பட்ட வாழ்க்கை முறையை வகுத்துக் கொண்டு இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்தவர்கள் . பேரறிவு படைத்தவர்கள். எண் பெருஞ் சித்திகள் அல்லது அட்டமா   சித்திகளைப் பெற்றவர்கள். சித்தர்கள் என்றாலே நிறைமொழி மாந்தர்   என்று பொருள்படுவதாக பழந்தமிழ் நூல்களில்   குறிப்புகள் உள்ளன.   சித்தர்கள் வான சாத்திரம் ,கைரேகை சாத்திரம்   தாவரவியல் நூல், சோதிட நூல்,கணித நூல்,     மாந்திரிகம் இரசவாதம் ,வைத்தியம்     போன்ற பல்வேறு துறைசார்   இலக்கியங்களைப்   படைத்துள்ளனர்.   பண்டைய அறிவியல் அறிவின் சிகரமாம்   சித்தவைத்தியம் பற்றி சித்தர்கள் பல பாடல்கள்   பாடியுள்ளனர்.   நமது உடம்புதான் பரமாத்மா. ஆ...

யாயும் ஞாயும்....

      யாயும் ஞாயும் யார் ஆகியரோ? "யாருக்கு மாப்பிள்ளை யாரோ அவர் எங்கே பிறந்திருக்கிறாரோ?" இந்தப் பாடல் நம்மில் பலருக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் இப்படி ஒரு வரி எங்கிருந்து வந்தது? யார் இதற்கு சொல் எடுத்துக் கொடுத்தது?  ஒரு சங்க இலக்கிய பாடலிலும்  இப்படி ஒரு கருத்து வந்திருக்கிறது என்பது எல்லாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அங்கிருந்து வந்ததுதான் இந்தப் பாடல் வரிகள். சங்க இலக்கிய நூல்கள் வரிசையில் எட்டுத்தொகை   நூல்களுள் ஒன்று குறுந்தொகை.  குறுந்தொகையைத்  தொகுத்தவர் பூரிக்கோ என்பவர் என்கின்றனர். அந்தக் குறுந்தொகையில் வரும்  யாயும் ஞாயும் யாராகியரோ  என்ற பாடல் யாருக்குத் தெரிகிறதோ இல்லையோ காதலர்களுகளுக்கு  கண்டிப்பாக தெரிந்திருக்கும். காதல் பற்றிப் பேசப்படும் இடங்களில் எல்லாம் கொண்டாடப்படும்  ஒரு பாடல் இது. அதனால் தான் காதலைப் பாடும்போது திரைப்பட கவிஞர்கள் இந்த பாடலின்  கருத்தை தங்கள் பாடல்களில்  கையாண்டுள்ளனர்.  இந்தப் பாடலை எழுதியவர்  யார் என்பது தெரியவில்லை என்றாலும்  செம்புலப் பெயல் நீர் போல எ...

யாதும் ஊரே யாவரும் கேளிர்

Image
            யாதும் ஊரே யாவரும் கேளிர் உலக சகோதரத்துவத்தை இரண்டாயிரம்  ஆண்டுகளுக்கு முன்பே   உலகிற்குச்  சொல்லித் தந்தவன் தமிழன். உலகம் வியந்து பார்க்கும்  ஒப்பற்ற தமிழ்க் கவிதைகளைப்       படைத்து உலக அரங்கில் தமிழருக்கென்று  தனித்துவத்தைப் பெற்றுத் தந்தவர்கள் பலர்.   தமிழர்கள் சிந்தனை ஆற்றல் மிக்கவர்கள்  என்பது  உலக மக்கள் அனைவராலும்  ஒப்புக் கொள்ளப்பட்ட செய்தி.   நமது பரிணாம வளர்ச்சி அறிவியல்,சமூகவியல், உளவியல்,  தத்துவம் சார்ந்ததாகவே இருந்திருக்கிறது  என்பதற்கு இலக்கியங்களில் பல ஆதாரங்கள்   உள்ளன. அந்தவகையில் தமிழ் இலக்கிய வரலாற்றில் தனக்கென தனி இடம்பெற்ற புலவர்களுள் கணியன்பூங்குன்றனார் என்னும்   சங்க காலப்  புலவர்  தனிப் பெருமை மிக்கவர். எந்த அரங்கிலும் இவர் புகழ்பாடாதவர் எவரும் இலர்  என்றுதான் சொல்ல வேண்டும். நாள், கிழமைகளைக் கணித்துக் கொடுக்கும்  சோதிடக்கலை தெரிந்தவர்களைக் கணியன் என்று அழைப்பர். பூங்குன்றம் என்பது இவர...