ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம்...
ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம்.... " ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ் " குறள் : 156 ஒறுத்தார்க்கு _ தண்டித்தவருக்கு ஒருநாளை _ ஒரே ஒருநாள் இன்பம் _ மகிழ்ச்சி பொறுத்தார்க்கு _ பொறுத்துக் கொண்டவருக்கு பொன்றும் _ அழியும் துணையும் _ அளவும், காலம் வரை புகழ் - இசை, புகழ்ச்சி தீங்கு செய்தவரைத் தண்டித்தவர்களுக்கு அன்று ஒருநாள் மட்டுமே இன்பம். ஆனால் பொறுத்தவர்களுக்கோ உலகம் அழியும்வரை புகழ் உண்டு. விளக்கம்: தீமை செய்தவரைத் தண்டித்தவருக்கு அந்த ஒருநாள் மட்டுமே மகிழ்ச்சி நிலைத்திருக்கும். நான் நினைத்ததை முடித்துவிட்டேன் என்பதைச் சொல்லிச் சொல்லி மகிழலாம். அந்த ஒருநாளோடு அந்த மகிழ்ச்சி காணாமல் போய்விடும். ஒருவர் செய்த தீமையைப் பொறுத்துக் கொள்ளும் பொறுமைசாலிகளை உலகமே கொண்டாடும். உலகம் உள்ளவரை ஒவ்வொருவர் உள்ளங்களிலும் அவர்கள் பற்றிய மதிப்பு உயரந்து கொண்டே இருக்கும். உயிர் உள்ளவரை புகழ் நிலைத்திருக்கும். தீமை செய்...