சவாலே சமாளி
சவாலே சமாளி "இருட்டு வீட்டுல குருட்டு எருமை என்ன செய்யுது?" குரல் கொடுத்தபடியே சமையலறைக்குள் நுழைந்தாள் புவனா. "ஒண்ணுமில்லையே....."உதட்டைப் பிதுக்கி கையை விரித்தாள் மாலதி. "என் அப்பன் குதுலுக்குள்ள இல்ல என்கிற மாதிரி இல்ல இருக்கு... நம்ப முடியலிய....ஏதோ ஒண்ணு இருக்கு ....வாயைக் காட்டு....வாயைக்காட்டு...."விடாமல் கேள்வி கேட்டுத் துரத்தினாள் புவனா. "காவோலையில என்னதோ ஓடுன மாதிரி சடசடன்னு பேசிகிட்டே இருக்க ....பூ மலர்ந்து கெட்டது. வாய் விரிஞ்சு கெட்டது ஞாபகம் வச்சுக்கோ..." "வாய்க்குள்ள ஏதோ இருக்கு அதுதான் வாயைத் திறக்க மாட்டேங்கிற...ஒண்ணுமில்லன்னா வாயை நல்லா திறக்க வேண்டியதுதானே," "இவ பெரிய டிடக்டிவ் ...கண்டு பிடிச்சுருவா முசல் பிடிக்கிற நாயை மூஞ்சைப் பார்த்தால் தெரியாது " " முசல் பிடிக்கிறேனா ...இல்லையா என்பது புடிச்ச பிறகு அல்லவா தெரியும்." "எடுக்குறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு" என்கிற மாதிரி பேச்செல்லாம் பெருசாத்தான் இருக்கு." "இன்று எப்படியும் கையும் களவுமாகபிடித்து அம்மா முன் நிறுத்தணும் ....