Posts

Showing posts with the label பாரதியாரின் தேசிய கீதங்கள்

மன்னும் இமயமலை எங்கள் மலையே....

மன்னும் இமயமலை எங்கள் மலையே.... பாரதியாரின் பாடல்களில் நாட்டுப்பற்று மிகுந்திருக்கும். தேசியம் பற்றிய கருத்து இருக்கும். தமிழ்நாட்டுக்குள் முற்றிலும் முடங்கிக் கிடக்காமல் தேசிய நீரோட்டத்தின் மீதே அவர் கவிகளெனும் ஓடம் செல்வதைக் காணலாம். இந்தியர் ,இந்தியா என்று தேசிய பற்று இழையோடிய பாடல்கள் அதிகம். இந்தியப் பெருமை எவை எவையென பாரதியின் பாடல்களைப் படிக்கும் போது புரியும். இத்தனைப் பெருமைமிகு நாட்டினர் நாம் என்பதை எண்ணி எண்ணி நம்மைப்  பூரிப்படைய வைக்கும். பாரதியாரின் தேசிய கீதங்கள் என்ற  தலைப்பின்கீழ் வரும் பாடல்கள் யாவும் நம்மை தேசியத்தின் மீது பற்று கொண்டிட வைக்கும். எங்கள் நாடு இதுவென மார்தட்டிட வைக்கும். இமயமலை எங்கள்மலை என்ற பாரதி கங்கை எங்கள் ஆறு எனவும் சொந்தம்  கொண்டாடுகிறார். உலகமே வியந்து போற்றும் உபநிடத நூல்கள் எம்முடையவை. வீரர்களும் மாமுனிகளும் வாழ்ந்த நாடு எனப் பெருமிதம் கொள்கிறார். ஞானம் மிகுந்த நாடு என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் புத்தபிரான் அருள்மிகு நாடு  எனச் சொல்லி பூரித்துப் போகிறார். ஏழையாக இனி துஞ்சோம். எவர்க்கும் இனி அஞ்சோம் தன்னலம் பாராது எத்தொழிலும்...