Posts

Showing posts with the label யாரினும் காதலம் என்றேனா...

யாரினும் காதலம் என்றேனா....

Image
            யாரினும் காதலம் என்றேனா.... " யாரினும் காதலம் என்றேனா ஊடினாள் யாரினும் யாரினும் என்று "                           குறள்  : 1314 யாரினும் _ எல்லோரை விடவும் காதலம்  _ ,காதல் கொண்டுள்ளேன் என்றேனா _ என்று கூறினேன்  ஊடினேன் _ ஊடல் கொண்டாள் யாரினும் யாரினும் _ யார் யாரை விடவும் என்று _ என்று சொல்லி எல்லோரைவிடவும் மிகுதியாக உன்மேல் காதல் கொண்டுள்ளேன் என்று நான் சொல்ல  நீர் காதல் கொண்டோரில்  யார் யாரை விடவும்  என்மீது  அதிக காதல் கொண்டீர் என்று கேட்டு அதற்கும் ஊடினாள் தலைவி. தலைவன் சொல்லுவதாக குறள் அமைந்துள்ளது. விளக்கம் : "என்மீது வைத்துள்ள காதல் எவ்வளவு உயர்ந்தது  சொல்லுங்கள்" என்று கேட்டாள் தலைவி.  "மலையைவிட உயரமானது.." என்றான். " ம்உம். ..அவ்வளவு உயரமானதா....அப்படியானால் எவ்வளவு ஆழமானது என்று சொல்லுங்கள் பார்ப்போம் " " கடலைவிடப்  ஆழமானது " அப்பாடா ...ஏதோ பெரிதாக சாதித்துவிட்டதுபோல நிம்மதி பெருமூச்சு விட்டான். " எவ்வளவு பெரிய...