நா நெகிழ் சொற்றொடர்கள்
நா நெகிழ் சொற்றொடர்கள் மொழி விளையாட்டு சொற்களைப் பிழையின்றி உச்சரிக்கப் பயிற்சி தருவதாக இருக்கும். ழகர றகர லகர எழுத்துகள் சரியாக உச்சரிக்கப்பட சில சொற்றொடர்களைச் சொல்லிச்சொல்லி பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். பள்ளிக் குழந்தைகள் விளையாட்டாக இத்தகைய சொற்றொடர்களைச் சொல்லி விளையாடுவர். அதுகூட நல்ல தமிழ் உச்சரிப்புக்கு உதவுவதாக இருக்கும். இன்றும்கூட ஒரு சில மாவட்டங்களைச் சேர்ந்தோர் ள , ல , ழ வேறுபாடு இல்லாமல் பேசுவதைக் கேட்கும்போது தமிழ் என்ன பாடுபடுகிறது என வருந்துவதைத் தவிர வேறுவழி தெரியாது. படித்தவர்கள் புத்தகங்களில் கண்டிப்பாக நல்ல தமிழ்ச் சொற்களை மட்டுமே படித்திருப்பார்கள். அவர்கள் தவறாக உச்சரிக்கும்போது வியப்பாக இருக்கும்.சரியான உச்சரிப்பு இல்லை என்றால் பொருள் மாறிப் போகும். பிழைபட பேசுவது தவறாகாதா.?... பிழையில்லாமல் பேச பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழ் மொழி என்பத...