நோய்நாடி நோய்முதல் நாடி....
நோய்நாடி நோய்முதல் நாடி " நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல் " குறள் : 948 நோய் - பிணி நாடி - இன்னது என அறிந்து நோய்முதல் - நோய்க்கான முதற் காரணம் நாடி - ஆராய்ந்து அது - அந்த நோய் தணிக்கும் - தீர்க்கும் வாய் - வழி நாடி - அறிந்து வாய்ப்ப - தவறாமல், பிழையில்லாமல் செயல் - செய்க நோய் இன்னது என்பதை அறிந்து, அந்த நோய் வரக் காரணம் யாது என்பதை ஆராய்ந்து அதனைத் தணிக்கும் வழிகளைக் கண்டறிந்து பிழை நேர்ந்துவிடாது உடலுக்கு பொருந்தும்படி மருத்துவம் செய்க. விளக்கம் : முதலாவதாக ஒருவனது உடலில் ஏற்பட்டுள்ள நோய்க்கான அறிகுறிகளை வைத்து நோய் இன்னது என்பதைக் கண்டறிய வேண்டும். இரண்டாவதாக இந்த நோய் வருவதற்கான காரணம் என்ன ? என்னென்ன காரணிகள் இந்நோய் வருவதற்கு காரணமாக இருந்திருக்கும் என்பதைப் பற்றி விரிவாக ஆராய்ந்து அறிய வேண்டும். மூன்றாவதாக மருத்துவத்தைத் தொடங்குவதற்கு முன்னர் ஒருவனுடைய உடலில் இந்த மருத்துவத்தை ...