கிண்ணிப்பெட்டி
கிண்ணிப் பெட்டி கிண்ணிப் பெட்டி என்றதும் ஏன் கிண்ணிப் பெட்டியையே பார்க்காத மாதிரி கிண்கிணியென சிரிக்கிறீர்கள்? நீங்கள் கிண்ணிப்பெட்டியைப் பார்த்திருக்க வாய்பில்லைதான். ஊரில் இருப்பவர்களே கிண்ணிப்பெட்டியை மறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. பெருநகரங்களில் வசிக்கும் நீங்கள் பார்த்திருக்கவா முடியும்? அது என்னங்க கிண்ணிப் பெட்டி...? என்று நீங்கள் கேட்பது என் காதுகளில் விழத்தான் செய்கிறது. நீங்கள் கிண்ணிப் பெட்டி என்ற சொல்லுக்கே கூகுளில் பொருள் தேடும் நவீன கால மனிதர்கள். உங்களிடம் கிண்ணிப்பெட்டி...கிண்ணிப் பெட்டி என்றால் ... அட...நீங்கள் சைனா கிளே பௌல்ஸ் பிரியர்கள் என்பதை மறந்தே போய்விட்டேன். கிண்ணிப் பெட்டியைப் பற்றி நான் சொல்கிறேன் கேளுங்கள். இருக்கிறவரை கிண்ணிப்பெட்டி அருமை தெரியலைங்க... யார் வீட்டிலாவது சைனா கோப்பையைப் பார்த்தால் இந்த பௌலில் பண்டங்களை வைத்துத் தின்னும் காலம் நமக்கும் வராதா என ஏங்கியிருக்கிறேன். சைனா கோப்பையில் சாப்பிடுகிறவர்கள் எல்லாம் பணக்காரர்கள்...நாகரீ...