நிற்பதுவே நடப்பதுவே
நிற்பதுவே நடப்பதுவே உலகில் இருப்பவை யாவும் பொய்யா? மெய்யா? எது உண்மை? எது பொய்? இருக்கிறது ஆனால் இல்லை. இப்படி ஒரு குழப்பமான கேள்விகள் நம் அனைவர் மனதிலும் அவ்வப்போது வந்து போகும். அதற்கு விடை தெரியாது அப்படியே கடந்து வந்திருப்போம். அப்படி ஒரு கேள்வி பாரதியின் மனதிற்குள் எழ தன் உள்ளத்தில் தோன்றிய கேள்வியை உலகின் முன் வைக்கிறார் பாரதி. அவரே கேள்வி கேட்டு முடிவாகப் பதிலையும் தந்து விடுகிறார்.இப்படித்தான் உலகம் இருக்குமோ என்று நம்மையும் ஓர் ஆய்வுக் களத்தில் கொண்டுவந்து நிறுத்தி விடுகிறார். பாரதி" உலகத்தை நோக்கி வினவுதல்" என்ற தலைப்பில் எழுதிய அந்தப் பாடல் உங்களுக்காக... நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம் சொற்பனந் தானா? பல தோற்ற மயக்கங்களோ? கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ? உம்மில் ஆழ்ந்த பொருளில்லையோ? வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம் கானலின் நீரோ? வெறுங் காட்சிப் பிழைதானோ? போனதெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்ததே போனதால் நானுமோர் கனவோ?- இந்த ஞாலமும் பொய்தானோ? காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும் கோலமும் பொய்...