மாதம் மும்மாரி பொழிகிறது
மாதம் மும்மாரி பொழிகிறது அரசர் ஒருவர் நாட்டை நல்லமுறையில் ஆட்சி செய்து வந்தார். ஒவ்வொரு நாளும் நாடு எப்படி இருக்கிறது? நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்களா? நாட்டில் ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா? என்று நாட்டைப் பற்றியும் நாட்டு மக்களைப் பற்றியும் கேட்டுவிட்டுத்தான் தன் வேலைகளைத் தொடங்குவார். அன்றும் அப்படித்தான். அரசவைக்கு வந்தார் மன்னர். அரசவை கூடியது. "நாடு எப்படி இருக்கிறது ? அமைச்சரிடம் என்று கேட்டார். அதற்கு அமைச்சர், "மன்னா!வணக்கம். நாடு நன்றாக இருக்கிறது . உங்கள் ஆட்சியில் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் ஏது குறை என்று சொல்லிக்கொள்கிறார்கள்?" என்றார். "தாங்களாக கூறுகிறீர்களா? நாட்டு மக்கள் கூறினார்களா?" "நாட்டு மக்கள்தான் கூறினார்கள்." "விளைச்சல் எல்லாம் எப்படி இருக்கிறது? மழை பொழிகிறதா?" "அதற்கெல்லாம் குறைச்சல் இல்லை மன்னா...மாதம் மும்மாரி பொழிகிறது" "மாரி கேள்விப்பட்டிருக்கிறேன் . ஒரு மாறி... உருமாறி கேள்விப்பட்டிருக்கிறேன். அது என்ன மும்மாரி? "என்று கேட்டார் மன்னர். மன்னரிடமிருந்து இந்தக் கேள்வியை எத...