Posts

Showing posts with the label பழமொழி விளக்கம்

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான் உண்மைதாங்க...ஐந்து பெண் பிள்ளைகளைப் பெற்றால் அரசன் என்ன? யாராக இருந்தாலும் ஆண்டிதான். தங்கம் என்ன வாங்கும்படியாகவா இருக்கிறது? என்ற உங்கள் புலம்பல் என் காதுகளில் விழுகிறது. ஐந்து பெண் பிள்ளைகளுக்கும் திருமணம் செய்து வைத்து, சீர் செனத்தி என்று ஒவ்வொவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்து முடித்து எழும்பும்முன் கூன் குறுக்கு எல்லாம் ஒடிந்தே போய்விடும். அரசனாலேயே இதனை எளிதாகச் செய்துவிட முடியாது. சாதாரண எளிய மக்களால் எப்படி செய்துவிட முடியும் ?  கையில் இருக்கும் ஊறுனது பாருனது எல்லாம் கொடுத்துவிட்டு ஓட்டாண்டியாகப் போக வேண்டியதுதான். இப்படி எத்தனை குடும்பங்களைப் பார்த்திருப்போம்.? அதனால்தான் ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான் என்ற பழமொழி சொல்லப்பட்டிருக்கும். இதுதானே தங்களின் எண்ணம். இந்தப் பழமொழிக்கான பொருள் நீங்கள் நினைப்பதுபோல் ஐந்து பெண் பிள்ளைகளைப் பெற்றால் ஆண்டியாகிவிடுவோம் என்பதாகத்தான் இருக்குமோ?  சற்றே சிந்திக்க வேண்டிய பழமொழிதான். அப்படிச் சொல்லி இருந்தால் அது பெண்கள் குலத்திற்கே இழிவு அல்லவா! பெண்பிள்ளைகள் பெற்றோருக்குத் தொல்லை  க...

நிறைகுடம் நீர் தளும்பல் இல்

        நிறைகுடம் நீர் தளும்பல் இல் பழமொழிகள் படித்தவர்க்கும் பாமரர்க்கும் வழிகாட்டவல்ல சான்றோர் பெருமக்களின் அனுபவமொழிகள். உலகம் எப்படிப்பட்டது என்ற உண்மையை நம் முன் வைத்து கவனமாக நடை பயிலுங்கள் என்று அறிவுரை தந்து நிற்பவை. ஒவ்வொரு பழமொழியும் ஒரு அருமையான வாழ்வியல் உண்மையைச் சொல்லித் தந்து கடந்து போகும். " பழமொழியில் உமி கிடையாது " என்பார்கள் . அதாவது எந்தப் பழமொழியும்  பயனற்ற வெற்றுச் சொற்களால் புனையப்பட்டது அல்ல. எல்லா சொல்லும் பொருள் குறித்தனவாகவே என்பார் தொல்காப்பியர். அது நூறு விழுக்காடு உண்மை என்பதை உரக்கச் சொல்லிச் செல்வது பழமொழிகள். " நுண்மையும் சுருக்கமும் ஒளியுடைமையும் எண்மையும் என்றிவை விளங்கத் தோன்றிக் குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம் ஏது நுதலிய முதுமொழி என்ப " என்று முதுமொழிக்கும் தனி இலக்கணம் சொல்லித் தருகிறது தொல்காப்பியம். முதுமொழி கூர்மையும் நுட்பமான உலக நடைமுறை உண்மையும் கொண்டதாக  இருக்கும். சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் பண்பு முதுமொழிக்கு உண்டு. குறித்த பொருள் ஒன்றனையே  வரையறுத்து உரைக்கும் தன்மை  முதுமொழியின்  சிறப்பு...

நாயைக் கண்டால் கல்லை காணோம்...

Image
நாயைக் கண்டால் கல்லைக் காணோம்.... நாயைக் கண்டால் கல்லைக் காணோம் கல்லைக் கண்டால் நாயைக் காணோம்" இது வேடிக்கையாக சொல்லப்படும் பழமொழி. சிலருக்கு எப்போதும் நாயைக் கண்டால் போதும். கை தானாக கல்லை எடுத்துவிடும். நாய் கடித்துவிடுமோ என்ற அச்சத்தில் ஒரு பாதுகாப்பிற்காக கையில் கல்லைத் தூக்கிவிடுவர். இன்னும் சிலரோ நாய்மீது கல்லெரிந்துவிட்டு நாய் காலைக் காலை உயர்த்தி  நொண்டிக் கொண்டே  ஓடுவதைப் பார்த்து இன்புற வேண்டும் என்று ஒரு அற்ப ஆசை. இப்படி கல்லுக்கும் நாய்க்கும் தொடர்பு இருக்கோ இல்லையோ நமக்கும் கல்லுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்பது இதிலிருந்து தெரிகிறது. ஆனால் பழமொழி என்பது வெறுமனே சிரித்து மகிழ மட்டுமே கூறப்பட்ட ஒன்றாக இருக்கமுடியாது. அதனால் இந்தப் பழமொழிக்கு உள்ளார்ந்த  இன்னொரு பொருள் கண்டிப்பாக  இருந்திருக்க வேண்டும். அது கால ஓட்டத்தில் காணாமல் போயிருக்கலாம். அல்லது நாம்தான் அதன் உண்மையான பொருளைத் தேடாமல் விட்டிருக்கலாம். இப்போது அதன் உண்மையான பொருள் என்னவாக இருந்திருக்கும் என்பதைப் தேடித்தான் பார்ப்போமே! ஒரு பெரிய மனிதர் தன் தோட்டத்துக் காவலுக்காக...

இக்கரைக்கு அக்கரை பச்சை

Image
இக்கரைக்கு அக்கரை பச்சை இக்கரைக்கு அக்கரை பச்சை.  அருமையான வாழ்வியல் உண்மையைச்  சொல்லித் தரும் அனுபவமொழி. எப்போதுமே நம் கண்கள் அருகில் இருக்கும் பொருட்களைக் காணத் தவறிவிடும். தூரத்தில் இருக்கும் பொருட்களை நாடி ஓடும். இது கண்களின் குற்றம் அல்ல. இயல்பாகவே கண்களின் தன்மை அதுதாங்க. அழகான வீடு கட்டி இருப்போம். ஆனால்  அடுத்த வீட்டுக் காரனுடைய வீடுதான் அழகாக இருப்பதுபோல் தோன்றும். தன் வீட்டில் எவ்வளவுதான் ருசியாக சாப்பிட்டிருந்தாலும் ஒருநாள் நண்பன் வீட்டில் தின்ற  கடலை உருண்டை சுவையாகத் தெரியும். எந்தச் சேலை கட்டினாலும் பக்கத்து வீட்டுக்காரிக்கு  நன்றாக இருக்கிறது... எனக்குதான் ஒரு சேலைகூட சரியாக   வாய்க்க மாட்டேங்குது.... சொல்லி ...சொல்லி புலம்புவோம். பாவாடை சட்டை போட்ட காலத்தில் தாவணி போட்டுப் பார்க்க ஆசை வரும். தாவணிப் போட்டபிறகு  எப்போது சேலை கட்டுவோம் என்று ஏக்கமாக இருக்கும். திருமணம் ஆகி வந்து விட்டால்  எங்க அம்மா வீட்டுல...எங்க அம்மா வீட்டுல.... என்று ஆயிரம் முறை அம்மா வீட்டை நோக்கியே மனம் நாடி ஓடும். சிலருக்கு அடுத்த வீட்டுப் பெண...

காய்த்த மரம்தான் கல்லடி படும்

Image
காய்த்த மரம்தான் கல்லடி படும் அருமையான அனுபவமொழி. அனுபவித்து எழுதப்பட்ட மொழி. காய்த்த மரம் கல்லடி படும். ஒரு மரம் காய்த்திருந்தால் மட்டுமே பிறரைத்  திரும்பிப் பார்க்க வைக்கும். மொட்டையாய் ஒரு மரம் நின்று கொண்டிருந்தால் யாருமே சட்டை செய்வதில்லை ஏதோ ஒரு மரம் நிற்கிறது அவ்வளவுதான். அதற்குமேல் அந்த மரத்தை யாரும் அண்ணாந்து பார்ப்பதில்லை. மரத்தில் காய், கனிகள் காய்த்துக் கிடக்கும்போதுதான் அனைவரையும்  அண்ணாந்து பார்க்க வைக்கும். அதன் பலன் நமக்கும் சிறிதாவது கிடைக்காதா என்ற ஆவலில் கல்லெடுத்து வீச வைக்கும். .வண்டுகளும் தேனீக்களும்  பட்டாம்பூச்சிகளும் சுற்றி சுற்றி பறந்து வரும். மரத்திலிருந்து நமக்கும் ஏதாவது கிடைக்காதா என்று ஏங்க வைக்கும். அந்த ஏக்கம் தொட்டுப் பார்க்கத் தூண்டும். வழிப்போக்கர்கள் கண்களை எல்லாம் உறுத்தும். அந்த உறுத்தல் கைகளில் கல்லை எடுத்து வீச வைக்கும். கிடைத்தால் லாபம். இல்லை என்றால் மறுபடியும் வீசிப் பார்ப் போம் என்று தொடர்ந்து வீச வைக்கும். எதுவரை காய், கனிகள் இருக்கிறதோ  அதுவரை கல் வந்து விழத்தான் செய்யும். இது உலக இயல்பு. இதனால் மரம் பல நேரங்...